உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

துலாம் முதல் மீனம் வரை ராசிப்பலன்...! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

துலாம் ராசி நேயர்களே...!

உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். அக்கம்பக்கத்தினர் உங்களுக்கு ஆதரவு கொடுக்கும் நாளிது. 

விருச்சக ராசி நேயர்களே...!

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்ளும் நாள் இது. நட்பால் ஆதாயம் கிடைக்கும். உங்களுக்கு தேவையான பணம் உங்களை வந்தடையும்.

தனுசு ராசி நேயர்களே...!

பிள்ளைகள் பொறுப்புடனும் பாசத்துடனும் நடந்து கொள்வார்கள். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்த சில யோசனைகள் பிறக்கும் நாள் இது.

மகர ராசி நேயர்களே...!

வாழ்க்கையில் அனுபவித்து வந்த சில விஷயங்களை வைத்து எப்படி குடும்பத்தை நடத்த வேண்டும் என சிறிது நேரம் யோசிப்பீர்கள். நீண்ட நாளாக இருந்து வந்த முக்கிய பிரச்சினைக்கு தீர்வு காண முற்படுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்க வாய்ப்பு உண்டு.

கும்ப ராசி நேயர்களே..!

புதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். பல விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களை மதிக்கப்படுவார்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

மீன ராசி நேயர்களே...!

முக்கிய கோப்புகளை கையாளும் போது கவனமாக இருப்பது நல்லது முன்கோபம் தவிர்க்கப்பட வேண்டும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.