இன்றைய ராசிபலன்..! துலாம் முதல் மீனம் வரை..! 

துலாம் ராசி நேயர்களே..! 

பல சவாலான காரியங்களையும் சாதித்துக் காட்டுவீர்கள். மிக முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நாள்.

விருச்சிக ராசி நேயர்களே..!

நீங்கள் கடனாக வாங்கியிருந்த பணத்தை திருப்பிச் செலுத்தக்கூடிய நாளிது. குலதெய்வப் பிரார்த்தனை இருந்தால் நிறைவேற்றக் கூடிய நாள் இது 

தனுசு ராசி நேயர்களே..!

வேலை சுமை அதிகரித்து உள்ளதால் உடல் அசதி அவ்வப்போது வந்து நீங்கும் குடும்பத்தினருடன் நேரம் ஒதுக்க முடியவில்லை என கவலைப்படுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த தொகை உங்களை இன்று வந்தடையும்.

மகர ராசி நேயர்களே..!

உங்கள் குடும்பத்தில் அடுத்தடுத்து நடக்க இருக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு பணச்செலவு அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் வீடு சந்தோஷமாக இருக்கும். 

கும்ப ராசி நேயர்களே..!

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில்,நல்ல பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும் உங்களுடைய சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சாதிக்க வேண்டும் என்ற புதிய உற்சாகம் கிடைக்கும். 

மீன ராசி நேயர்களே..!

ஆளுமை திறன் உங்களுக்கு அதிகரிக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல உத்தியோகம் அமைய கூடிய நாள் இது.