இந்த ஆண்டு வழக்கத்தை விட 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

குறிப்பாக,மலை பிரதேசங்களில் அதிக வெப்பநிலை இருக்கும் என தெரிகிறது.

இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் வழக்கத்தை விட 3 முதல் 4 டிகிரி  செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும்என தெரிவிக்கப் பட்டு உள்ளது.

இதே போன்று ஹரியானா,டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட  மாநிலங்களில்  1 முதல் 2 டிகிரி  செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது

தென் இந்திய  மாநிலங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும்,தற்போது தொடங்கி உள்ள கோடைகாலம்  அடுத்து வரும் சில நாட்களில் படிபடியாக  வெப்பநிலை உயர்ந்து, சென்ற ஆண்டு இருந்ததை விட, இந்த ஆண்டு அதிகமாக  இருக்கும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது

எனவே நாம் செய்ய வேண்டியது,

முடிந்த அளவிற்கு அவ்வப்போது தாகம்  தணிக்க வேண்டும்...

வெயிலில் செல்லும் போது குடை கொண்டு போவது நல்லது ....

அதை விட முக்கியம்,தண்ணீர் பாட்டில் எப்போதும் கூடவே வைத்துக் கொள்ளுங்கள்..

இளநீர்,மோர் எடுத்துக்கொள்வது நல்லது....

உணவு  முறை

உணவு முறையிலும் மாற்றம் கண்டிப்பாக  தேவை....

காரம் அதிகம் கொண்ட உணவை  உட்கொள்வது  நல்லது கிடையாது.அதற்கு பதிலாக  கீரை வகைகள், தயிர் சாதம் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்..

குழந்தைகளுக்கு அதிக சத்து உணவை கொடுப்பது  நல்லது...

 வெள்ளரிக்காய்  அதிகம்  எடுத்துக் கொள்ளுங்கள்.....

வெயிலில் அலைபவர்கள், சன்ஸ் கிரீம் கண்டிப்பாக பயன்படுத்துவது நல்லது.