நாடே உரக்க  சொன்ன அபிநந்தன் என்ற பெயருக்கான அர்த்தம் தற்போது மாறி உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

இன்று டெல்லியில் கட்டுமான துறை மாநாட்டை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அப்போது நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் மனதிலும் வார்த்தையிலும் உச்சரிக்கப்பட்டு வாழ்த்து மழையை பொழிய வைத்த பெயர் அபிநந்தன் என்றும், அகராதியில் இடம்பெற்றுள்ள சொற்களின் அர்த்தத்தையே மாற்றும் ஆற்றல் இந்தியாவுக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்

அபிநந்தனின் பெயர் தற்போது வாழ்த்துவதற்கும் வரவேற்பதற்குமாக உள்ளது என பிரதமர் தெரிவிக்கும் போது கூட்டத்தில் பலத்த கரகோஷம் எழுந்துள்ளது. தொடர்ந்து நாட்டின் பெருமையை பற்றி பேச தொடங்கிய பிரதமர், நாம் என்ன செய்கிறோம்..? என்ன செய்ய போகிறோம் என உலகமே உற்று நோக்குகிறது என பேசி உரையை முடித்தார் பிரதமர் மோடி.

 நாடே பாராட்டிய அபிநந்தனுக்கு, மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்தது மோடியின் உரை