வாட்ஸ் அப் இணை நிறுவனரான பிரையன் ஆக்டன் தனது டிவிட்டர்  பக்கத்தில் பேஸ்புக்கை நீக்கும் நேரம் வந்துவிட்டது (#deletefacebook) என  குறிப்பிட்டு உள்ளதால்,இந்த தகவல் உலக அளவில் பெரும்  அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது

பேஸ்புக் நிறுவனத்தின் மீது கடந்த சில மாதங்களாகவே பல்வேறு  குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

மேலும், 2016  ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலின் போது,ட்ரம்ப் கட்சியின் பிரச்சாரத்திற்கு வேலை பார்த்ததாக கேம்பிரிட்ஜ் அனல்டிக்கா என்ற நிறுவனத்திற்கு,பேஸ் புக் மூலமாக வாக்காளர்களின் தனிப்பட்ட  தகவல்கள் தரப்பட்டதாக கூறப்படுகிறது.

 

அதுமட்டுமில்லை....இந்த நிறுவனம் உலக நாடுகளில் நடக்கும் பல  முக்கிய தேர்தல் பணிக்காக பின்னணியில் இருந்து செயல்பட்டு வருவதாக பலகுற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது.

மத்தியில் ஆளும் பாஜக விற்கும் கூட,தேர்தல் பிரச்சார யுக்திகளை கையாண்டதாக அந்த நிறுவனமே முன்பு வெளியிட்டு இருந்தது

இது போன்று பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளதால்,கடந்த ஒரு வார காலமாக பேஸ்புக் பங்குகளின் விலை வெகுவாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த புகாரை அடுத்து,கேம்பிரிட்ஜ் நிறுவனம் அதன் முக்கிய அதிகாரியான அலேக்ஸான்ண்டே நிக்ஸை பணிநீக்கம் செய்ய வைத்துள்ளது

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வாட்ஸ் அப் இணை நிறுவனரான  பிரையன் ஆக்டன் தனது  ட்விட்டர் பக்கத்தில் பேஸ்புக்கை நீக்கும் நேரம் வந்துவிட்டது என குறிப்பிட்டு உள்ளதால் இந்த விவகாரம் உலக அளவில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது