தனக்கு பிடித்த பெண்ணை காதலிப்பது, தன்னை பிடித்து வரும் பெண்ணை காதலிப்பது, பார்க்கும் பெண்களை எல்லாம் காதலிப்பது என மூன்று வகை. மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள் அதிக போலித்தனத்தை வெளிப்படுத்துகிறார்களாம்.

போலியாக நடித்தால் பெண்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என அறிந்து கொள்ள வேண்டும்.

பிடித்தவை - பிடிக்காதவை

பெண் தனக்கு ஒரு விஷயம் பிடிக்கும் அல்லது பிடிக்காது என்று கூறினால் ஆணும் அதையே கூறி சொம்படிக்கும் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். சில சமயங்களில் பெண்ணின் விருப்பத்துக்கு மாறுபாடான விருப்பத்தை கூறுவதே கூட ஈர்ப்பை ஏற்படுத்தும்

எக்ஸ்- உறவுகள்

இறக்கத்தைச் சம்பாதிக்கும் நோக்குடன் தான் உண்மையாக காதலித்த பெண் தன்னை ஏமாற்றிவிட்டது போல கட்டுக்கதைகளை கூறுவதை தவிர்க்க வேண்டும். ஒரு பெண்ணைப் பற்றி மற்றொரு பெண்ணிடம் குறை கூறுவதை அந்தப் பெண் விரும்புவதில்லை. 

உடற்திறன்

பல ஆண்கள் உடற்திறனுடன், ஆரோக்கியமான டயட் பின்பற்றினால் பெண்களுக்கு பிடிக்கும் என்று கருதி தான் ஃபிட்னஸ் மன்னன் எனக் காட்டிக்கொள்வார்கள் ஜிம்மில் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவார்கள். ஆனால் உண்மையான காதல் உருவத்தை பார்த்து வராது என்றும் அப்படி வந்தால் அது உண்மையான காதலே கிடையாது என்றும் புரிந்துகொள்ள வேண்டும்.

போலி செலவுகள்!

சம்பளத்தில் இருந்து, தனது ஆடம்பர வாழ்க்கை முறை வரை பல பொய்களை தொடருவதும் தான் ரிச் என்றும் செலவு விலை குறித்தெல்லாம் கவலையில்லை என்றும் காட்டிக்கொள்வது பயன் தராது.

நட்பு!

காதலிக்கு பல நண்பர்கள் இருக்கும் நிலையில் தான் சோஷியல் என வெளிப்படையாகக் கூறிக்கொண்டு உள்ளூர் வேறுப்பார்கள். காதலியின் தோழமை குறித்து சந்தேகப்பட கூடாது என்றாலும் தோழமைகள் தவறானவர்களாக இருந்தால் அதனையும் ஏற்றுக்கொள்வது போல நடிக்க அவசியம் இல்லை. காதலன் என்பவன் காதலிக்க மட்டுமல்ல, காதலிக்கு காவலனாக இருக்கவும் கூட.

உன்னை பற்றியே...

நான் நாள் முழுக்க உன்னை மட்டும் தான் நெனச்சுட்டு இருந்தேன் என்று கூறுவது ஏற்கமுடியாதது. எப்படி நாள் முழுக்க ஒரே நபரை நினைத்துக் கொண்டிருக்க முடியும்?