தாம்பத்ய வாழ்க்கையில், ஆண்களை ஒரு விதமான அழுத்தத்திற்கு கொண்டு செல்வது என்ன வென்றால் அது ஆண்மை குறைபாடு என்றே கூறலாம்.

அந்த வகையில், ஆண்மை குறைப்பாட்டிற்கு என்னதான் மருந்து எடுத்துக்கொண்டாலும், இயற்கையான உணவு முறைகளில் உள்ளது நமது ஆரோக்கியமான உடல் நலம் 

அந்த வகையில் "மகிழம்பூ" மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மகிழமரம் என்பது தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக காணப்படுகிறது. 20 முதல் 50 அடி உயரம் வரை வளக்கூடியது. இந்த மரத்தின் பூ (மகிழம்பூ) உடல் உஷ்ணத்தை குறைக்கும், காம உணர்வை அதிகரிக்கும்.

டிப்ஸ் 1

நான்கு மகிழம் பூக்களை ஒரு டம்ளர் நீரிட்டு நன்கு கொதிக்க வைத்து வடிக்கட்டவும். பின்னர், இத்தண்ணீருடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து சர்க்கரையை சேர்த்தால் மருந்து ரெடி. இதனை சாப்பிட்ட 48 மணி நேரத்தில், தாம்பத்ய உறவில் ஈடுபடுவதற்கான ஆர்வம் அதிகரிக்கும் 

டிப்ஸ் 2

மகிழம் விதை, நாயுருவி விதி ஆகியவற்றை வகைக்கு100 கிராம் எடுத்து சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டியளவு காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வர உடல் வலுவடையும், ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

டிப்ஸ் 3

மகிழம்பூ, பாதாம் பிசின், மஞ்சள் ஆகியவைற்றை வகைக்கு100 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும். இதில், காலை, மாலை இருவேளையும் அரைத்தேக்கரண்டி அளவு சாப்பிட்டால் 7 நாட்களில் வெள்ளைப்படுதல் குணமாகும். ஆண், பெண் உறுப்புகளில் உண்டாகும் புண் குணமாகும்.

இதனை மருத்துவ குணங்களை கொண்ட இந்த பூவின் பயன்பாட்டை உணர்ந்து நாம் எடுத்துக்கொண்டால் இயற்கையான முறையில் ஆரோக்கியத்தை பெற முடியும்.