திருவாரூர் கொள்ளையன் முருகனுக்கு இவ்வளவு நல்ல மனதா..? வெளிவந்த ஆச்சர்ய தகவல்..! 

கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி சுமார் 13 கோடி ரூபாய்க்கும் மேலான தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக கனகவள்ளி  மணிகண்டன் சுரேஷ் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்து இருந்தனர்

ஆனால் இந்த கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் திருவாரூர் முருகன் என தெரியவந்ததும் அவரையும் போலீசார் தேடி வந்தனர்.திருவாரூர் முருகன் மீது ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்து கிடக்கின்றன. இதற்கு முன்னதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கும்பலும் இவர்களே.. 

இதற்கிடையில் பெங்களூர் நீதிமன்றத்தில் திருவாரூர் முருகன் சரணடைந்தார். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு திருடப்பட்ட நகைகள் எங்கு வைக்கப்பட்டுள்ளது என விசாரணை மேற்கொள்ளப்பட்டது.பிறகு அவரிடம் இருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார் முருகன்.

இந்த நிலையில் திருச்சி தனிப்படை காவல்துறையினர் திருவாரூர் முருகனிடம் விசாரணை மேற்கொள்வதற்காக பெங்களூரு காவல்துறையிடம்  மனு அளித்து அங்கேயே காத்திருக்கின்றனர். இதற்கிடைப்பட்ட நேரத்தில் முருகனின் மனைவி மஞ்சுளாவிடம்  மேற்கொண்ட விசாரணையில் பல ஆச்சரியமான விஷயங்கள் தெரிய வந்துள்ளது. அப்போது, "எங்களுக்கு திருமணம் ஆகும் போது அவர் ஒரு நிறுவனத்தில் உயர்பதவியில் இருப்பதாக தெரிவித்து இருந்தார். பின்னர் தான் அவர் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இருந்தபோதிலும் என்னை சமாதானப்படுத்தி விட்டு மீண்டும் அதே தொழிலை தொடர்ந்தார். இதற்கு முன்னதாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த போது,அந்த பணத்தை கொண்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேட்டி சேலைகள் வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல் 10 நாட்கள் அன்னதானம் வழங்கினார்.

மீதமுள்ள நகையை உருக்கி மதுரையில் உள்ள ஒரு நபரிடம் பணமாக பெற்று வீட்டில் உள்ள ஒரு பாத்திரத்தில் வைப்பது அவருடைய வழக்கம் என தெரிவித்துள்ளார். திருவாரூர் முருகன்  கொள்ளையனாக  இருந்தாலும், இவ்வளவு சாமர்த்தியமாக திருடுகிறான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.. என இன்னொரு பக்கம் விமர்சனமும் எழுந்துள்ளது. இதற்கிடையில் திருடுவதில் இருந்து கிடைக்கக்கூடிய பணத்தை வைத்து பல பேருக்கு வேட்டி  சட்டை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு நல்ல மனம் கொண்டவரா அவர் என விமர்சனம் எழுந்துள்ளது.