மாவட்ட ஆட்சியர் என்ற பொறுப்பு எந்த அளவிற்கு மிக பெரிய பொறுப்பு என்பது நமக்கு தெரிந்த ஒன்றே....அப்படிப்பட்ட உயரிய பதவி வகிக்கும் மாவட்ட ஆட்சியர்கள் பலரில், அவர்களுடைய நடத்தை மற்றும் மக்களுகாக உண்மையான முழு உழைப்பை  கொடுப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்ற பெருமையை தட்டி சென்றவர்களில் சகாயம் ஐஏஎஸ் அவர்களை சொல்லலாம்....

அதே போன்று, தற்போதைய திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி அவர்கள் மக்கள் மனதில் ஒரு நீங்கா இடம் பிடித்துள்ளார்.

மக்களின் குறைகளை காத்து குடுத்து கேட்டு,உடனடியாக நடவடிக்கை எடுப்பதும்,நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாணவர்களுக்கு பல அறிவுரை கூறி, வழி காட்டுவதுமாக உள்ளார்

அதே போன்று சமீபத்தில் கூட,ஒரு மாணவி தான்மாவட்ட ஆட்சியராக விரும்புகிறேன் என்று கூறியதற்கு,அதன் முக்கியத்துவத்தையும்,அந்த மாணவியை ஊக்கப்படுத்தும்   நோக்கிலும் ஆட்சியர் வாகனத்திலேயே அழைத்து வந்து இறக்கிவிட்டார் திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி

இந்த நிகழ்வு மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்தது

இதற்கு அடுத்தப்படியாக தற்போது திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி.தனக்கு கற்று கொடுத்த கரூர் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு மரியாதை செய்து உள்ளார்.

தான் பயின்ற அந்த கல்வி நிறுவனத்திற்கு சென்று, தனக்கு பாடம் சொல்லி கொடுத்த  ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கினார்.

இந்த நிகழ்வு அனைவராலும் பாரட்டும் வகையில் அமைந்துள்ளது.