Horoscope: தமிழ் புத்தாண்டு நாளில் சூரிய பெயர்ச்சி, நிகழ்ந்துள்ளதால் யார் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் புத்தாண்டு நாளில் சூரிய பெயர்ச்சி, நிகழ்ந்துள்ளதால் யார் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சூரிய பெயர்ச்சி 2022:

இதுவரை மீன ராசியில் பயணித்து வரும் சூரியன் 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி அதாவது தமிழ் புத்தாண்டு நாளான இன்று செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த சூரிய பெயர்ச்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில், ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாகவும், செவ்வாய் கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுகிறது. இந்த சூரிய பெயர்ச்சி யார் யாருக்கு என்னனென்ன பலன்கள் தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு, தமிழ் புத்தாண்டு நாளில் இந்த சூரியனின் பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கும். சூரியன் ராசி மாற்றம் பல்வேறு சிறப்பு பலன்கள் கிடைக்கும். இதனால், பொருளாதாரமுன்னேற்றம் ஏற்படும். தொட்டது துலங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில்நல்ல முன்னேற்றம் காணப்படும. சொந்த தொழில் செய்பவர்களுக்கு வியாபாரம், மேம்படும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு நாளில் இந்த சூரியனின் பெயர்ச்சி, பணியிடத்தில் அதிகபட்ச பலன்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் செயலில் வெற்றி காண்பார்கள். உத்தியோகத்தில் வேண்டிய முன்னேற்றம் காணப்படும். இந்த நாளில் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் முன்னேற்றம், ஆதாயமும் உண்டாகும்.

சிம்மம்:

சிம்ம ராசிகார்களுக்கு தமிழ் புத்தாண்டு நாளில் சூரியனின் இந்த பெயர்ச்சி விசேஷமாக இருக்கும். ஏனென்றால் சூரியன் இந்த ராசிக்கு அதிபதியாக இருக்கிறார். சூரியனின் ராசி மாற்றத்தால், பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பணியிடத்தில் சாதகமான மாற்றம் ஏற்படும். தொழிலில் வேண்டிய முன்னேற்றம் காணப்படும். சூரியனின் இந்த சஞ்சாரம் அரசு வேலை செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

விருச்சிகம்:

தமிழ் புத்தாண்டு நாளில் சூரியனின் இந்தப் பெயர்ச்சி, உங்களுக்கு வெற்றியை தரும். பண வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் பண லாபம் கிடைக்கும். சூரியனின் இந்த ராசி மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எல்லா விதத்திலும் பயனுள்ளதாக இருக்கும்.

கும்பம்:

தமிழ் புத்தாண்டு நாளில் சூரியனின் இந்த ராசி மாற்றத்தால், உங்கள் இலக்கை எளிதாக அடைவீர்கள். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான மாற்றம் ஏற்படும். தொழில் வாழ்க்கையிலும் லாபம் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும்.

மேலும் படிக்க ,....Horoscope: ஹனுமான் வழிபட்டால்...சனி தோஷத்திலிருந்து விடுபடும் 4 ராசிகள்...