Horoscope Today: இந்த மே மாதம், 10 ம் தேதிக்கு பிறகு சூரியன், புதன் மற்றும் செவ்வாய் ஆகிய 4 பெரிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றப் போகின்றன. இதனால், கிரகங்களின் நேரடி அருள் பெரும் அந்த ஐந்து ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்த்து கொள்ளலாம்.
பொதுவாக கிரகங்களின் இட மாற்றங்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மே மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறுவதால், பலரது வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஜோதிட சாஸ்திரப்படி, முதலில் மே 10 ஆம் தேதி, புதன் கிரகம் சுக்கிரன் ஆளும் ரிஷபத்தில் பிற்போக்குத் தனமாக செல்கிறார். இதையடுத்து, கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் 2022 மே 15 ஆம் தேதி தனது ராசியை மாற்றி மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த சூரிய பெயர்ச்சி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதேபோன்று, கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஏற்கனவே கும்பம் ராசியில் பயணித்து வருகிறார். இதையடுத்து, தனது ராசியை மாற்றி மே 17ம் தேதி மீன ராசிக்கு செல்கிறார். இறுதியாக மே மாத இறுதியில் அதாவது மே 23ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்கிறார்.
எனவே, இந்த மே மாதத்தில் ஏற்படும் 4 கிரகங்களின் மாற்றம் குறிப்பிட்ட இந்த 5 ராசிகளுக்கு மட்டும் நேரடி பழங்களை தரும் அப்படி யார் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு மே மாதத்தில் ஏற்படும் நான்கு கிரகங்களின் ராசி மாற்றம்,சிறப்பாக இருக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். திடீர் பணப்புழக்கம் இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு மே மாதத்தில் ஏற்படும் கிரகங்களின் ராசி மாற்றம், நல்ல வேலை கிடைக்கும். உங்களுக்கு எதிர்பாராத திடீர் மாற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். இந்த மாதம் உங்களுக்கு சுக்கிரனின் நேரடி அருள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு 4 கிரகங்களின் ராசி மாற்றம், நல்ல பலன்களை கொடுக்கும். எடுத்த முடிவில் இருந்து உறுதியாக செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் ராசி மாற்றம், குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாத காரியம் நிறைவேறும். ஏற்கனவே வேலை செய்பவர்கள் பெரிய பொறுப்பு கிடைக்கும். அரசாங்க வேலை பெற முயற்சிப்பவர்களுக்கும் இந்த மாதம் அதிர்ஷ்டம் உண்டாகும்.உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு கிரகங்களின் ராசி மாற்றம், பல கதவுகள் திறக்கப்படும். உங்களுக்கு மகிழும் படியான நல்ல நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. அலுவலகத்தில் சில பெரிய பொறுப்புகளையும் பெறலாம். புதிய யுத்திகளை கையாளுவது சிறப்பாகும். திருமண யோகம் கைகூடும்.சொத்து சம்பந்தமான வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
