Asianet News TamilAsianet News Tamil

மகளிர்தினம் எதற்கு ? பெண்கள் பாதுகாப்பிற்கு உறுதி உண்டா இந்த சமுதாயத்தில் ...?

there is no use of celebrating womens day
there is-no-use-of-celebrating-womens-day
Author
First Published Mar 8, 2017, 1:59 PM IST


மகளிர்தினம் எதற்கு ? 

தன்னை சுற்றி ஒரு மாயையை உருவாக்கி கொண்டு வாழ்ந்து வரும் பெண்களுக்கு தான் இன்றைய தினம் “ மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது என்றால் பாருங்களேன்

மகளிர்  தினம் கொண்டாடும் அளவுக்கு, இந்தியாவில்  மகளிருக்கான  சுதந்திரம் , அவர்களுக்கான  உரிமை  எல்லாம்  நடைமுறையில்  உள்ளதா  என்றால் இல்லை .

பெயரளவிற்கு  பெண்களை  போற்றிக்  கொண்டு , சமூதாயத்தில் ஒரு படி கீழே தான் வைத்திருக்கிறார்கள் பெண்களை...  அதற்கேற்றவாறு  பெண்களும் , தன்னை சுற்றி ஒரு மாயை  உருவாக்கி, அதற்குள் வாழ்கிறார்கள் .

பெண்களுக்கு பாலியல் வன் கொடுமை நடப்பதிலிருந்து , பெண் சிசு வரை பாலியல்  பாலாத்கார கொடுமை செய்து கொல்வதும் , எரிப்பதுமாக இருக்கும் போது மகளிர் தினம் என்ன செய்ய போகிறது? எதற்காக மகளிர் தினம் ?  

இன்றைய  தினத்தன்று உண்மையில்  மகளிரை  மதித்து தான்  இந்த சமூதாயம் இருக்கிறது என்றால்,  பெண்களுக்கு நடைபெறும் அனைத்து கொடுமைக்கு எதிராக  ஒரு  கடுமையான  சட்டம்  கொண்டுவர  அரசு முற்பட்டால்  அதுவே  மிக சிறந்ததாக  இருக்கும் .

இதற்காக எல்லாம்  எந்த  நடவடிக்கையும் எடுக்காமல்,  வாய் நிறைய  மகளிர் தின வாழ்த்துக்கள்   என்று கூறியே  மாயை உருவாக்கிட வேண்டாமே ......

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios