ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், ஏற்கனவே தனியார் பள்ளியில் தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களும், அரசு வேலை பெறுவதற்காக காத்திருக்கிறார்கள்.இந்நிலையில், பெருத்த எதிர்பார்ப்புக்கிடையில், ஆசிரியர்களுக்கான “டெட்” தேர்வு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஏப்ரல், 29, 30 ஆம் தேதி ....!

சட்டசபையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஸ்டாலின், ஆசிரியர் தகுதி தேர்வு, குறித்து பேசினார். அப்போது, கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆசிரியர்களுக்காக நடத்தப்பட வேண்டிய “ டெட் “ தேர்வு நடைபெறவில்லை என சுட்டி க்காட்டினார் . இதற்கு பதிலளித்து பேசிய, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் வரும் ஏப்ரல் 29, 30 ஆம் தேதிகளில் ’டெட்’ தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.

அதிகார பூர அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை :

ஆசிரியர் தகுதி தேர்விற்கான, “டெட் “ தேர்வு நடைபெறுவதற்கான அதிகார பூர்வ அறிவிப்போ, அல்லது அதற்குண்டான தேதியோ, அதற்கான அதிகார பூர்வ இணையத்தளத்தில் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிபிடத்தக்கது.