இந்தோனேசியாவை சேர்ந்த 15 வயது சிறுவன், கோழியைப் போல் அமர்ந்து முட்டையிடும் சம்பவம் மருத்துவ உலகில் உள்ள அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுவன் அக்மல்:

இந்தோனேசியாவில் கோவா என்கிற பகுதியை சேர்ந்த 10 வகுப்பு படிக்கும் சிறுவன் அக்மல். இவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோழியைப் போல் முட்டையிட்டு வருகின்றானாம். இந்த தகவலை சிறுவனின் பெற்றோர்  மருத்துவர்களிடம் கூறியபோது இதற்கு வாய்ப்பே இல்லை என்று அடித்து கூறியுள்ளனர்.

நிரூபிக்கப்பட்ட உண்மை:

கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 வதுக்கும் மேற்பட்ட முட்டைகளை அக்மல் விட்டுள்ளதாகவும்  இந்த முட்டையை உடைத்து பார்த்தல் மஞ்சள் நிறத்தில் திரவம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இந்த பிரச்சனைக் குறித்து முதலில் மருத்துவர்களிடம் கூறியபோது இதை நம்ப மறுத்த மருத்துவர்கள் ஸ்கேன் செய்தபோது முட்டை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

குழப்பத்தில் மருத்துவர்கள்:

இந்த அதிசய மாற்றம் குறித்து எந்த ஒரு தெளிவான புரிதலும் இல்லாததால் சிறுவனுக்கு என்ன சிகிச்சை கொடுப்பது என குழப்பத்தில் உள்ளனர் மருத்துவர்கள்.