சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 38,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இதனால், உலகப் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர். எனவே பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி, பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் புதிய உச்சத்தை தொட்டு வந்தது.  இதனிடையே கடந்த வாரம் முதல் தங்கம் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

 சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரு.4,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 38,480-க்கு விற்பனையாகிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.992 குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல், வெள்ளியின் விலையும் 3 நாட்களில் ரூ.7100 சரிந்துள்ளது.