எதிர்மறை எண்ணம் கொண்ட மனிதர்கள்

எதிர்மறை எண்ணம் கொண்ட மனிதர்களுடன் வாழும்போதும், அத்தகைய கலாச்சாரத்தைப் பின்பற்றும்போதும் ஒருவரால் நேர்மறையாக சிந்திப்பது கடினம். எனவே, அத்தகைய ஒரு எதிர்மறை அம்சத்திலிருந்து விடுபடுவதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

இதன் விளைவாக, நாம் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாக செய்து முடிக்க முடியாது. ஒரு தெளிவு இல்லாமல் ஒரு செயலை செய்யும் சூழல் நமக்கே தெரியாமல் நம்மை சூழ்ந்து இருக்கும்.

தன் மீதான நம்பிக்கை நமக்கே குறைய ஆரம்பிக்கும். நம்பிக்கை குறையும் போது, நாம் எந்த செயலிலும் முழு மனதோடு நேர்த்தியாக செய்ய இயலாது.

நிம்மதி இழக்க செய்யும் :

எதிர்மறை எண்ணங்கள் நம்மை சூழ்ந்து இருப்பதால், வாழ்கையில் விரக்தி இருக்கும். எண்ணங்கள் திசை மாறும். சந்தோசமான வாழ்கை என்றால் என்ன என்பதற்கு பொருள் கூட விளங்காது . இவ்வழு ஏன் ? தீய செயலில் கூட ஈடுபட வைக்கும். இதன் விளைவாக நமக்கு மட்டுமில்லாமல் நம்மை சுற்றி உள்ள அனைவருமே பாதிக்கும் நிலை உருவாகும். எனவே நல்லதே செய்ய வேண்டும் என்றால், நல்ல எண்ணத்தை மட்டும் கொண்டிருக்க வேண்டும் . நல்ல எண்ணம் இருக்க வேண்டும் என்றால், நேர்மறை எண்ணங்கள் இருக்க வேண்டும். நேர்மறை எண்ணங்கள் இருந்தால் நாம் வாழும் வாழ்க்கை என்றும் இனிக்கும்