இது நாள் வரை நாம் செய்த தவறு இதுதான்..! மறந்தும் இதை செய்துடாதீங்க..! 

நம் கைவிரல்களை குங்குமம், விபூதி எடுக்க பயன்படுத்தும் போது எந்த விரலை பயன்படுத்த வேண்டும் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்த பின்னர், குங்குமம் விபூதி மஞ்சள் என அனைத்தையும் அர்ச்சகர் தருவார் அல்லவா..? அதனை எப்படி நம் நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும் எனபதில் கூட சில வரைமுறை உண்டு.. அதில் குறிப்பாக எந்த  விரலில் விபூதியை எடுத்து நெற்றியில் இட வேண்டும் என்பதில் உள்ளது முக்கிய பொருள்..

கட்டை விரல்;

கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.

ஆள் காட்டி விரல்; 

ஆள் காட்டி விரலால் விபூதியை வைத்தால் பொருட் கள் நாசம் ஆகும்

நடுவிரல்; 

நடுவிரலால் விபூதியை தொட்டு நெற்றியில் வைத்துக்கொண்டால் நிம்மதியின்மை வரும் 

மோதிர விரல்;

மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை. அமையும்.

சுண்டு விரல்;

சுண்டு விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் வைத்துக்கொண்டால் கிரகதோஷம் எற்படும்.

சரி அப்படி என்றால் எந்த விரலில் எடுத்து விபூதியை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி வருகிறது அல்லவா..? மறக்காமல் நோட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

மோதிர விரல் – கட்டை விரல்

மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை வைத்துக் கொண்டால் நாம் சொல்வதை தான் இந்த உலகம் கேட்கும்.. நம்பும்... எப்போதும் நமக்கு கிட்டும் என்பது ஐதீகம்....முயற்சி செய்து தான் பாருங்களேன்.