சந்திரயான் 2 - ஆர்பிட்டர் அனுப்பிய முக்கிய தகவல்..!  நிலவில் என்ன இருக்கிறது தெரியுமா..? 

நிலவின் காற்று மண்டலத்தில் ஆர்கான் 40 என்ற வாயு இருப்பதை சந்திராயன்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் உறுதிசெய்து உள்ளது.

நிலவின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக இந்தியா அனுப்பியது தான் சந்திராயன் 2 விண்கலம். ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவை அடைந்தது. ஆனால் நிலவில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் லேண்டர் நிலவை நோக்கி வந்துக்கொண்டிருநந்த போது திடீரென சிக்னல் கிடைக்காமல் போனது.

இந்தநிலையில் சந்திராயன்-2 இருந்து வெற்றிகரமாக நிலவை சுற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் நிலவில், காற்று மண்டலத்தில் ஆர்கான் 40 என்ற வாயு இருப்பதாக கண்டறிந்து அதுகுறித்த விவரத்தை அனுப்பி உள்ளது. இது தவிர்த்து நிலவின் மேற்பகுதியில் காணப்படும் ஏற்ற இறக்கம், நிலவின் மேற்பரப்பில் உள்ள தனிமங்கள், நிலவின் தோற்றம் இவற்றை மேலும் விரிவாக தெரிந்து கொள்வதற்கு ஏதுவான பல புகைப்படங்களை எடுத்து அனுப்புகிறது ஆர்பிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆர்பிட்டர் மேற்கொண்டு வரும் நிலவு குறித்த சோதனை புகைப்படங்கள் நிலவை ஆராய்ச்சி செய்வதற்கு அடுத்தகட்ட முயற்சிக்கு வழிவகுக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.