திடுக்கிடும் தகவல்..! மீனவர் போல் வேடமிட்டு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி கைது..! ராமநாதபுரத்தில் பரபரப்பு..! 

ராமநாதபுரத்தில் மீனவர் வேடத்தில் தங்கியிருந்து சதி செய்ய திட்டமிட்டிருந்த தீவிரவாதியை தற்போது அதிரடியாக கைது செய்து உள்ளது போலீசார். 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை அப்துல்சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இருவரும் கடந்த 8-ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு கேரளாவில் தலைமறைவானார்கள்.

இது தொடர்பாக கியூபிராஞ்ச் விசாரணை செய்ததில் "தங்களது அமைப்பைச் சேர்ந்தவர்களை தொடர்ந்து கைது செய்து வந்ததால் போலீசாருக்கு எதிர்ப்பை காட்டவே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுகொன்றதாக அவர்கள் கூறினர். 

இந்த நிலையில் மீனவர் வேடத்தில் தாவூத் என்ற தீவிரவாதியை கைது செய்து உள்ளது காவல் துறை. இவரிடம் விசாரணை செய்ததில் எஸ்ஐ வில்சன் கொலை குற்றவாளிகளுக்கு பண உதவி செய்ததும் தெரிய வந்துள்ளது. இவரை ஏற்கனவே தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது