தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடையை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து நேற்று குடிமகன்கள் மிகவும் ஆவலாக மதுபானத்தை வாங்கி சென்றுள்ளனர்.

அதன்படி இன்று, நாளை,தேர்தல் தேதியான நாளை மறுதினம் இந்த மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடை மூட நேற்று உத்தரவு பிறப்பித்தது  தேர்தல் ஆணையம். இதனைத் தொடர்ந்து குடிமகன்கள் கடை திறப்பதற்கு முன்பாகவே கடையின் வெளியே காத்திருந்து மதுவகைகளை வாங்கி சென்று உள்ளனர்.

கடந்த 3 நாட்களில் மட்டுமே 423 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகி உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகபட்சமாக 165 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று 117 கோடியும், சனிக்கிழமை 149 கோடி அளவிற்கும் விற்பனையாகி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது