Asianet News TamilAsianet News Tamil

தமிழக மாணவர்களே...! பிரதமர் மோடியை சந்திக்க "சூப்பர் சான்ஸ்"..!

பிரதமர் மோடி அவ்வப்போது ஏழை எளிய மக்களுடன் நேரடியாக பேசுவதில் ஆர்வம் தெரிவிப்பவர். அவர்களுக்கு உண்டான பிரச்சினையை கேட்டு அறிந்து கொள்பவர். 

tamnilnadu students having chance to see pm modi before the exam
Author
Chennai, First Published Dec 21, 2019, 7:15 PM IST

தமிழக மாணவர்களே...! பிரதமர் மோடியை சந்திக்க "சூப்பர் சான்ஸ்"..!

பிரதமர் மோடியை சந்திக்க  தமிழக மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. அதன்படி இன்னும் 2 மாதத்தில் மாணவர்களுக்கு பொது தேர்வு நடக்க இருப்பதால், அதனை தைரியமாகவும்  மன உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்த உள்ளார் பிரதமர் மோடி.

tamnilnadu students having chance to see pm modi before the exam

இது குறித்து வரும் ஜனவரி 16 ஆம் தேதி உரை நிகழ்த்த உள்ளதால், மாணவர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பையும் அளிக்கப்பட உள்ளது ,அதன்படி தமிழகத்திலிருந்து மிக சிறப்பாக கட்டுரை எழுதி சமர்ப்பிக்கும் மாணவர்களில் இருந்து 66 பேர் தேர்வு செய்யப்பட்டு ஜனவரி 16ஆம் தேதி நடக்கும் பிரதமர் மோடி உடனான உரையாடலில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamnilnadu students having chance to see pm modi before the exam

பிரதமர் மோடி அவ்வப்போது ஏழை எளிய மக்களுடன் நேரடியாக பேசுவதில் ஆர்வம் தெரிவிப்பவர். அவர்களுக்கு உண்டான பிரச்சினையை கேட்டு அறிந்து கொள்பவர். இந்த நிலையில் மாணவர்களுடனும் உரையாட விருப்பம் தெரிவித்து, அந்தவகையில் இந்த வருடம் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் மன உறுதியுடன் நம்பிக்கையுடன் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வரும் ஜனவரி 16 ஆம் தேதி மாணவருடன் உரை நிகழ்த்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios