தமிழக அஞ்சல் துறை எடுத்த "அதிரடி நடவடிக்கை"! மக்களுக்கு "இப்படியும்" சேவை செய்ய தயார் !

கொரோனா எதிரொலியால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவானது வரும் 14ம் தேதி முடிவடைகிறது. அதன்பின்னரும் சேவைகள் முழுமையாக நடைமுறைக்கு வருமா என்றால் சற்று சந்தேகம்தான்.

இந்த ஒரு நிலைகள் வீட்டில் முடங்கி இருக்கும் பொது மக்களுக்கு சேவை செய்வதற்காக தமிழ்நாடு அஞ்சல் துறை மிக முக்கிய முடிவை எடுத்து உள்ளது. அதன்படி சரக்கு போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு தேவையான உயிர்காக்கும் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் பெறுவதற்கு ஏதுவாக அஞ்சல் துறையின் இணையவழியில் பதிவு செய்யலாம் அல்லது அருகில் உள்ள அஞ்சலகத்தில் நேரடியாக சென்று பதிவு செய்யலாம் என தெரிவித்து உள்ளது.

குறிப்பாக அத்தியாவசிய தேவைகளான, சானிடைசர், முககவசம், கையுறை உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு டெலிவரி செய்ய தயாராக உள்ளது.மேலும் முக கவசம், கையுறை, சானிடைசர் தேவை அதிகமாக இருப்பதால் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க அஞ்சல் துறை இந்த ஏற்பாடு செய்துள்ளது  

அஞ்சல்துறை மேலும் வென்டிலேட்டரை உற்பத்தி செய்யும் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக பெற்று எங்கு  சப்ளை செய்ய வேண்டுமோ அங்கு பாதுகாப்பாய், எந்த சேதமும் இல்லாமல் சப்ளை செய்வதற்கு தயாராகிவருகிறது அஞ்சல்துறை. 

மேலும் முகக்கவசம், சானிடைசர், கையுறை, வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பிற இடங்களுக்கு கொண்டு செல்ல அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அஞ்சல் அலுவலகங்களில் முன்பதிவு செய்யலாம். இவை அஞ்சல் துறையின் சரக்கு வாகனத்தில் மிகவும் பாதுகாப்பாக அனுப்பப்படும் என்றும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அஞ்சல் வட்டம் செய்ய உள்ளதாக தெரிவித்து உள்ளது.