Asianet News TamilAsianet News Tamil

நாம் தினமும் குடிக்கும் பாலில் அதிக நச்சுத்தன்மை ..! வெளியான அதிர்ச்சி தகவல்...!

தமிழகம், கேரளா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் தான் இது போன்ற அநச்சுத்தன்மை அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Tamilnadu is the first place for having contaminated milk circulation says food safety dept
Author
India, First Published Nov 22, 2019, 5:10 PM IST

அனுமதிக்கப்பட்ட அளவை விட பாலில் அதிக நச்சுத்தன்மை அதிகம் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Tamilnadu is the first place for having contaminated milk circulation says food safety dept

இது குறித்து  மக்களவையில் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே தெரிவிக்கும் போது பாலில் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை அதிகம் உள்ளதாகவும், தமிழகம், கேரளா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் தான் இது போன்ற அநச்சுத்தன்மை அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் தான் பாலில் அதிக நச்சுத்தன்மை உள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது. 

தமிழகத்தில் இருந்து மட்டும் 551 பால் மாதிரிகள் பரிசோதனை செய்ததில் 88 பால் மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் இருந்துள்ளதை உணவு கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என தெரிவித்தார் 

Tamilnadu is the first place for having contaminated milk circulation says food safety dept

இந்த நிலையில், தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம் உள்ளது என்ற  தகவல் வெளியாகி உள்ளதால், அது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios