Asianet News TamilAsianet News Tamil

மூன்றே நாட்களில் "அடித்து தூக்கிய" ஆளுநர் தமிழிசை...! ஆடி அசந்து போன தெலங்கானா..!

ஆம்...  தமிழக பாஜக தலைவராக தமிழிசை அவர்கள் இருந்தபோது அவரின் அற்புத வசனமான "தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்" என்பதனை யாராலும் என்றுமே மறக்க முடியாது.இனி வேறு யாராவது அந்த வசனத்தை சொன்னாலும் நம் மனதில் முதலில் வந்து நிற்பது தமிழிசை அவர்களே.... 

Tamilisai Soundararajan has taken action on property issues within 3 days and people shocking and praised her
Author
Chennai, First Published Jan 26, 2020, 7:31 PM IST

மூன்றே நாட்களில் "அடித்து தூக்கிய" ஆளுநர் தமிழிசை...! ஆடி அசந்து போன தெலங்கானா..!  

தெலங்கானா மாநில கவர்னராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். மூன்று மணி நேர சினிமாவில் காண்பிப்பது போல உடனுக்குடன் தீர்வு நிஜத்திலும் நடக்கும் என்பதை நிரூபித்துக் காட்டி, மக்கள் மத்தியில் பெரும் மதிப்பை பெற்று உள்ளார் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்.

ஆம்...  தமிழக பாஜக தலைவராக தமிழிசை அவர்கள் இருந்தபோது அவரின் அற்புத வசனமான "தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்" என்பதனை யாராலும் என்றுமே மறக்க முடியாது.இனி வேறு யாராவது அந்த வசனத்தை சொன்னாலும் நம் மனதில் முதலில் வந்து நிற்பது தமிழிசை அவர்களே.... 

Tamilisai Soundararajan has taken action on property issues within 3 days and people shocking and praised her

இதற்கு பதிலடியாக தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை என பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க... தமிழிசை அவர்களின் உருவத்தையும், சில சமயங்களில் அவருடைய பேச்சையும் கிண்டலடித்து வந்த நெட்டிசன்கள் தெலங்கானா கவர்னராக தமிழிசை அவர்கள் பொறுப்பேற்ற பிறகு தலைகுனிந்து நின்றார்கள். இப்படி ஒரு தருணத்தில் வேறு ஒரு புதிய அவதாரமாய் தன்னுடைய கவனத்திற்கு வரும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண்பதே முக்கிய நோக்கமாக வைத்து துரிதமாக செயல்பட்டு வருகிறார் கவர்னர் தமிழிசை.

Tamilisai Soundararajan has taken action on property issues within 3 days and people shocking and praised her

நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த பெத்த கல்லா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேஸ்வர ரெட்டி. இவருடைய தந்தை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காலமானார். பின்னர் அவரது பெயரில் உள்ள சில ஏக்கர் நிலத்தை தனது தாயார் பெயருக்கு மாற்ற முற்பட்டு உள்ளார். ஆனால் அரசு ஆவணத்தில் இருக்கக்கூடிய ஒரு சிறிய பிழை காரணமாக மாற்ற முடியாமல் பரிதவித்து வந்துள்ளார். மேலும் அதனை சரிசெய்ய முடியாது எனஅதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரி அதாவது ஆர்டிஓ -வை அணுகி உள்ளார். இதனை கலெக்டர் மட்டுமே சரிசெய்ய முடியும் என்றும், அடுத்து இந்த வேலை முடிய மிக தாமதமாகும் எனவும் ஆர்டிஓ தெரிவித்துள்ளார். 

Tamilisai Soundararajan has taken action on property issues within 3 days and people shocking and praised her

இதுதொடர்பாக கடந்த மூன்று மாத கால போராட்டத்துக்கு பின்னும், கடைசிவரை பிரச்சினை தீர்ந்தபாடில்லை. இதுகுறித்து வெங்கடேஸ்வர ரெட்டியின் நண்பர் ஒருவர் கவர்னருக்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்லுங்கள் என தெரிவிக்கவே, கவர்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.பின்னர் இது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் உடனடியாக தீர்வு காணும் பொருட்டு களத்தில் இறங்கி மாவட்ட கலெக்டரிடம் பேசி பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண அதிரடி உத்தரவிட்டுள்ளார்

Tamilisai Soundararajan has taken action on property issues within 3 days and people shocking and praised her

அதன்பேரில், அந்த ஆவணத்தில் இருந்த பிழையை நீக்கி ஆர்டிஓ உதவியுடன் நிலத்தை வெங்கடேஸ்வர ரெட்டியின் தாயார் பெயருக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த அனைத்து வேலையும் மூன்றே நாட்களில் நடந்து முடிந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்... நம்பித்தான் ஆகவேண்டும். கடந்த மூன்று மாதங்களில் நாயா பேயா அலைந்தும் நடக்காத... சரி செய்ய முடியாத பிரச்சனையை... "3 மணி நேர சினிமாவில் ஹீரோ உடனடியாக ஒரு தீர்வை கொடுப்பது போல காண்பிக்கப்படும் அல்லவா? ஆனால் அதை விட விரைவாக  மூன்றே நாட்களில் தமிழிசை சௌந்தரராஜன் மிக சிறப்பாக செயல்பட்டு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று உள்ளார்.

இந்த செய்தியின் மூலமாக தமிழக பாஜக தொண்டர்களும் தமிழிசையின் ஆதரவாளர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழிசையின் இந்த அதிரடி நடவடிக்கையை ஒட்டுமொத்த தெலங்கானா மக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios