ஆளுநர் என்றாலும் என்னுடைய விருப்பம் "இதுதான்"..! மனம் திறந்த தமிழிசை..! 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கனா ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு தற்போது மிகவும் பிஸியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் தமிழிசையின் "தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்" என்ற வாசகத்தை தமிழக மக்கள் மிஸ் செய்கிறார்கள் என்றே சொல்லலாம். தற்போது தெலுங்கானா ஆளுநர் தமிழக மாநிலத்தில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தற்போது தமிழகத்திற்கு வந்த தமிழிசை சௌந்தரராஜன் கோவை கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். தன்னை மேதகு ஆளுநர் என அழைப்பதை விட சகோதரி என அழைப்பதே எனக்கு மிகவும் பிடிக்கும். அதைத்தான் நான் விரும்புகிறேன் என தெரிவித்து இருந்தார். 

தொடர்ந்து பேசிய தமிழிசை தமிழ் மண்ணுக்கும் தெலுங்கானாவிற்கும் பாலமாக செயல்படுவேன் என பெருமிதம் தெரிவித்திருந்தார். தமிழிசையின் இந்த பேச்சுக்கு சக மாணவர்கள் மத்தியில் பெரும் கைதட்டலை கிளம்பியது.