தமிழிசைக்கு "ஓர்க்கவுட்" ஆனது மஞ்சள் நிற ஆடை..!  தெரியுமா இந்த ரகசியம்..? 

தெலுங்கானா ஆளுநராக தமிழிசையை நியமனம் செய்து அறிவிப்பு வெளியான செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கடந்த 4 நாட்களாகவே தமிழிசை அவர்கள் தொடர்ந்து வெவ்வேறு மஞ்சள் நிற ஆடையை அணிந்து வருகிறார்.

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஏன் இப்படி ஒரு திடீர் மாற்றம் என அனைவரையும் சிந்திக்க வைக்கும் வண்ணம் இருக்கிறது அவருடைய மஞ்சள் நிற ஆடை. மேலும் மஞ்சள் சிகப்பு கலந்த சேலையை அணிந்து திருவேற்காடு கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பிய தமிழிசை, மீண்டும் சிகப்பு நிற ஆடையை அணிந்து பங்காரு அடிகளார் அவர்களையும் சந்தித்து ஆசி பெற்று உள்ளார்.

தமிழிசைஅணியும் எந்த ஒரு ஆடையிலும் மஞ்சள் இல்லாமல் இருக்காது என்ற அளவிற்கு தற்போது அதிக அளவிலான மஞ்சள் நிற ஆடையை அணிந்து வருகிறார்.

இதுகுறித்து விசாரித்தபோது தமிழிசைக்கு மிகவும் பிடித்த கலர் மஞ்சள் நிறம் என்றும், மஞ்சள் நிறம் அவருக்கு சென்டிமென்ட் கலர் என்றும், அதனால் தான் செப்டம்பர் 1 ஆம் தேதி அறிவிப்பு வெளியான  தருணத்தில் இருந்தே வெவ்வேறு மஞ்சள் நிறம் கொண்ட ஆடையை அணிந்து வருகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.

உதாரணமாக ஒரு சில புகைப்படங்கள் உங்களுக்காக....