தாறு மாறாக மாறிய தமிழிசை...! ஆடி போன டெல்லி மேலிடம்...! 

தமிழக பாஜக தலைவர் தமிழிசை என்றாலே எதிர்கட்சியினருக்கும் மனதில் முதலில் தோன்றுவது அயராது ஓடிக்கொண்டே இருப்பவர், கட்சிக்காக அரும்பணி புரியக்கூடிய நபர் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் கிடையாது.

அவ்வளவு ஏன்? தமிழக மக்களின் மன நிலையில் பாஜக பற்றி அந்த அளவிற்கு பெரும் வரவேற்பு இல்லை என்றாலும் முன்பை விட நாளுக்கு நாள் மக்கள் பாஜக பக்கம் திரும்ப மிக முக்கிய காரணமாக இருப்பவர் தமிழிசை. காரணம்...விடியற்காலை எழுந்தவுடன் கட்சி பணிக்காக வீட்டை விட்டு ,கிளம்பினால் பிரேக் பாஸ்ட் நேரத்தில் விமான நிலையத்திலும் லன்ச் நேரத்தில் வேறு ஒரு விமான நிலையத்திலும் மாலை நேரத்தில் தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்தி விட்டு இரவு நேரத்தில் டின்னர் சாப்பிட குறைந்தது 11 மணி ஆகி விடுகிறது.

இப்படியுமாக... செல்லும் இவரது அரசியல் வாழ்க்கை பற்றி எதிர் கட்சி தொண்டர்கள் கூட சிலர் இவர் பாஜக கட்சியில் இல்லை என்றால் என்னுடைய ஓட்டு தமிழிசைக்கு தான் என சில பதிவுகளை கூட காண முடிந்த்து.


 
தமிழிசையால் புகழ் அடைந்த பல மீம்ஸ்...! 

தமிழிசையின் பல புகைப்படத்தை கொண்டு மீம்ஸ் கிரியேட்டர்கள் சும்மாயில்லாமல் பல காமெடி மீம்ஸ் உருவாக்கி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கினார்கள். அதில் ஒரு சிலது  எல்லோரையும் சிந்திக்க வைத்தது .. ஒரு சில மீம்ஸ் சிரிக்க வைத்தது.. ஆனால் குறிப்பிட்ட சில  மீம்ஸ் மனதை பெரும் காயப்படுத்துவதாக இருந்தது...

இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாத தமிழிசை எதையும் திரும்பி கூட பார்க்காமல் மக்கள் பணியே மகேசன் பணி என வெற்றி நடை போட்டு முன்னேறி வருகிறார்... விரைவில் அவருக்கு  தேசிய அளவிலான ஒரு முக்கிய பொறுப்பு காத்திருப்பதாக தகவல் கசிந்து உள்ளது.

மும்பை ஹேர் ஸ்டைலிஸ்ட்..!
 
ஒரு சில மீம்ஸ் விஷயங்கள் டெல்லி மேலிட முக்கிய பெண் புள்ளிக்கு தெரியவரவே... தமிழக மக்கள் இப்படியுமா? கிண்டல் செய்வார்கள் என சற்று வருத்தப்பட்டு ஓவர் நைட்ல ஒபாமா ஆவது போல, மும்பையில் இருந்து ஸ்பெஷல் ஹேர் ஸ்டைலிஸ்ட் தமிழகத்திற்கு அனுப்பி தமிழிசையின் ஹேர் ஸ்டைல் மாற்றப்பட்டு உள்ளது.

கடந்த 4 நாட்களாக தமிழிசையை பார்க்கும் யாவரும் வாவ்.... என்ன ஒரு மாற்றம் ? என வாய் பிளந்து பார்ப்பது மட்டுமல்லாமல் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இது மட்டுமா.. மிக முக்கிய வேடத்தில் பல கோடி மதிப்பில் தயாராக உள்ள புது படத்தில் நடிக்க தமிழிசையை அணுகிய விஷயம் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.