துபாயில் கார் டாக்சி கூப்பனில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டடுள்ளதற்கு அங்கு வாழும் தமிழக மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். 
 
உலகில் எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அறிமுகப்படுத்தும் புது விஷயமாக இருந்தாலும், கண்டுபிடிக்கப்பட்ட நாட்டை விட அதனை முதலால் வாங்கி பயன்படுத்தும் நாடு  என்றால் அது அரேபிய நாடு தான்...

துபாய் என்றாகலே பெரிய பெரிய மால்.. தலை நிமிர்ந்து உச்சி வெயிலை பார்க்கும் அளவில்  உயர்ந்து இருக்கும் பல கட்டடங்கள்.. துபாயில் இல்லாததே இல்லை எனலாம்.. இப்படி ஒரு  அழகிய, மிகவும் முக்கியமான இடமான துபாய்க்கு வர ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது...

மேலும் துபாய் என்றாலே... வர்த்தக ரீதியாகவும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் பல நாடுகளில் இருந்து அங்கு வருகை புரிகிறார்கள்.. அவர்களுக்கு ஏதுவாக துபாயில் கார் டாக்சி கூப்பனில் பல மொழிகள் இடம் பெற்று உள்ளது. மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தமிழ் மொழி சேர்க்கப்பட்டடுள்ளதற்கு அங்கு வாழும் தமிழக மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.