வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்..! தமிழகத்தில் மட்டும் 500 பேருக்கு மேல் பாதிப்பு... மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!  

இதுவரை தமிழகத்தில் சுமார் 500 பேர் வரை பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

மழைக்காலம் தொடங்கிய நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் மற்றும் ஒரு சில மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. தர்மபுரி வேலூர் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்குவால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் நூற்றுக்கணக்கான மக்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது, இதனை தொடர்ந்து டெங்கு தடுப்பு பணிகள் சுகாதார துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் இன்னொரு பக்கம் பன்றி  காய்ச்சல்  பரவ தொடங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு ஒருவிதமான வீதி கிளம்ப தொடங்கி தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை ஓர்  புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 9 மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 27886 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1186 பேர் உயிரிழந்ததாகவும் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

அதில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் 5087 பேரும், குஜராத்தில் 4840 பேரும், டெல்லியில் 3606 பேரும், தமிழகத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் பன்றி காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.