summer started in chennai
கோடைக்காலம் தொடங்கியது .வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்குகிறது. வெயிலின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள பல வழிமுறைகளில் யோசனை செய்தாலும் சில வழிமுறைகள் உண்மையில் நம் உடலுக்கு நல்லது கொடுக்கும்
நம் முன்னோர்கள் அதாவது நம் தாத்தா பாட்டி காலத்தில், அவர்கள் எடுத்துக்கொண்ட உணவு முறைதான் சால சிறந்தது . அந்த காலக்கட்டத்தில் கஞ்சி, கூழ், என காலை நேர சிற்றுண்டியாகவே உண்டனர். ஆனால் தற்போது இருக்கும் தலைமுறையோ அப்படி என்றா என்ன ? என ஆச்சர்யத்தோடு கேள்வி கேட்பதை பார்க்க முடிகிறது.

இருந்தபோதிலும், இந்த உணவு முறை எல்லாம், முற்றிலும் மறந்துவிடவில்லை ஒரு சில பெரியவர்களால்...ஆம் கோடைக்காலம் தொடங்கிய இந்த தருணத்திலேயே கம்பங் கஞ்சி மற்றும் கேழ்வரகு கூழ் என அனைத்தும் தயாரித்து, அந்த அமுதத்தை சாலைகளில் வைத்து விற்கின்றனர்.
வெறும் 15 ரூபாய்க்கு, ஒரு சொம்பு கூழ் , வயிறார பருக முடிகிறது . இந்த கம்பங்கஞ்சியும்,கேழ்வரகு கூழும் எத்தனை சிறப்பு வாய்ந்தது என்பது நம் முன்னோர்களுக்கு மட்டுமே தெரிந்தது. இனி நாமும் தெரிந்துக்கொண்டு இதனை பருகி , உடல் நலத்துடன் வாழலாமே
