அடுத்து இவர்களை தான் "ஜெயிலுக்கு அனுப்ப" பிசியா வேலை பார்க்கிறேன்..! சு.சாமி ஓப்பன் டாக்..! 

பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியம் சாமி செய்வதியாளர் சந்திப்பின் போது பல்வேறு  கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு  நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் பதில் அளித்துள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு.., 

நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைய தயார் என்றால்,ஏற்றுக்கொள்வீரா? என கேட்ட கேள்விக்கு கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவருக்கு என்னுடைய தேவை இருக்காது. காரணம் நிறைய பேர் அவர் பாஜகவில் இணைய வேண்டுமென நினைக்கின்றனர். அவருக்கு ஆதரவு உண்டு. அவர் எப்போதும் இந்து மதத்துக்கு ஆதரவாக இருந்தால் வரவேற்பேன். இல்லையென்றால் பழைய சினிமா பாணியில் டயலாக் பேசினால் கண்டிப்பாக எதிர்ப்பேன் என திட்டவட்டமாக தெரிவித்தார் சுப்ரமணியம் சுவாமி.

அதன் பின் பட்ஜெட் குறித்த கேள்வி கேட்டபோது "நான் அதனை முழுமையாக படிக்கவில்லை.. தற்போது சிதம்பரத்தை மீண்டும் ஜெயிலுக்கு அனுப்புவதிலும், சோனியா காந்தியை ஜெயிலுக்கு அனுப்புவதிலும், ராமர் அறக்கட்டளையில் வேலை பார்ப்பதில் பிஸியாக இருக்கிறேன், அதனை முடித்துவிட்டு நேரம் இருக்கும்போது பட்ஜெட் படித்துவிட்டு, அது குறித்து விளக்கம் அளிக்கிறேன் என தெரிவித்தார்

ராமர் அறக்கட்டளையில் உறுப்பினராக உள்ளீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது, "எனக்கு வேறு வேலை இல்லையா? என்னுடைய சேவை அவர்களுக்கு தேவைப்பட்டது எனவே தற்போது உதவிகரமாக இருக்கிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.

கைலாச தீவில் அடைக்கலம் புகுந்துள்ள நித்தியானந்தாவை பற்றி கேட்ட போது, மாநில அரசு அவரை தேடுகிறதா? இல்லை மத்திய அரசு அவரை தேடுகிறதா ? விஜய் மல்லையா, நீரவ் மோடி  கூட ஓடி விட்டார்கள். நிதியமைச்சர் பதவியை வாங்கிக் கொடுங்கள்... நான் அவர்களை பிடித்து கொடுக்கிறேன் என நகைச்சுவையாக குறிப்பிட்டு இருந்தார்.

கமல்ஹாசன் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, "அவர் ஒரு முட்டாள்" அவரைப் பற்றி பேசுவதற்கு லாயக்கு படாது என ஒரே போடாக போட்டு அடுத்த டாபிக் பேச தொடங்கிவிட்டார்.

தமிழகத்தின் அடுத்த  முதலமைச்சராக  வர வாய்ப்பு யாருக்கு உள்ளது என கேட்ட கேள்விக்கு, அதனை இப்போதே சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் இருக்காது. இன்னும் கொஞ்சம் நாள் ஆக வேண்டும். இப்போது கூறிவிட்டால் அனைவரும் எனக்கு எதிரியாக செயல்படுவார்கள் என தெரிவித்தார்.

சசிகலா சிறையில் இருந்து வெளிவருவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பின்பு கண்டிப்பாக ஒரு புதிய வடிவத்தில் அவருக்கு உதவி செய்ய நான் தயாராக இருப்பேன் என குறிப்பிட்டுள்ளார் சுப்பிரமணியம் சுவாமி. இவருடைய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.