உத்திர பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபாஷ் யாதவ்(42). இவர் தன்னுடைய நண்பருடன் அதே பகுதியில் இருக்கும் ஒரு கடைக்கு சென்றுள்ளார். 

உஷார்..! லபக்கு லபக்கென முட்டை சாப்பிட்டவர் மூச்சடைத்து பலி..! நடந்தது என்ன.? 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் முட்டை சாப்பிடுவதில் போட்டி போட்டுக்கொண்டு அதிக முட்டைகளை சாப்பிட்டதில் ஒருவர் மூச்சு அடைத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபாஷ் யாதவ்(42). இவர் தன்னுடைய நண்பருடன் அதே பகுதியில் இருக்கும் ஒரு கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த கடையில் அவித்த முட்டை இருப்பதை கண்டு இருவரும் வாங்கி உண்டுள்ளனர். பிறகு எதார்த்தமாக நம் இருவரில் யார் அதிக முட்டையை சாப்பிடுகிறோம் என பார்க்கலாமா? என ஒருவர் கேட்கவே சுபாஷ் யாதாவோ மிகவும் உணர்ச்சியாக கண்டிப்பாக நான் தான் அதிக முட்டை சாப்பிடுவேன் என போட்டியில் இறங்கி உள்ளார்.

பின்னர் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு ரூபாய் 2000 பரிசு தொகையும் உண்டு என இவர்கள் இருவருமே பேசிக்கொண்டு முடிவெடுத்துள்ளனர். இதன் காரணமாக சுபாஸ் யாதவ் உணர்ச்சிவசப்பட்டு முட்டைகளை தொடர்ந்து சாப்பிட தொடங்கினார். மிகவும் கஷ்டப்பட்டு நாற்பத்தி ஒரு முட்டைகளை சாப்பிட்ட சுபாஷ் அதனையும் மீறி 42வது முட்டையையும் சாப்பிட முயன்றார். அப்போது அவருக்கு மூச்சு வாங்க ஆரம்பித்து உள்ளது. அதோடு திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டல் ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் உடன் வந்த நண்பர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து சுபாஷை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது