Asianet News TamilAsianet News Tamil

Neem fight corona virus: மக்களின் நம்பிக்கையை உண்மையாக்கிய இந்திய ஆய்வு..! கொரோனாவை விரட்டும் வேப்பிலை சாறு.!

Neem fight corona virus: நம்முடைய ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும், வேப்பமர பட்டைச் சாறு கொரோனா வைரஸின் பரவலைக் குறைக்கவும் சிகிச்சையளிக்கவும் உதவும் என்று சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

Study finds neem tree-based drugs may help fight COVID
Author
Chennai, First Published Mar 3, 2022, 1:20 PM IST

நம்முடைய ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும், வேப்பமர பட்டைச் சாறு கொரோனா வைரஸின் பரவலைக் குறைக்கவும் சிகிச்சையளிக்கவும் உதவும் என்று சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

இந்தியாவை பூர்விகமாக கொண்டுள்ள வேப்ப மரம், ஒட்டுண்ணி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு சக்திக்காக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. வேப்ப மரத்தின் பட்டை சாறு, மலேரியா, வயிறு மற்றும் குடல்புண்கள், தோல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவி உள்ளது.

Study finds neem tree-based drugs may help fight COVID

 ஒட்டுமொத்த உலகமும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, கரோனா என்னும் கொடிய வைரஸ் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. என்ன தான் இந்த கரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், கரோனா வைரஸ் குறிப்பிட்ட காலத்தில் பின் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என்று உருமாற்றமடைந்து தாக்கி வருகின்றன.எனவே, இந்த கரோனா வைரஸை அழிக்க பல்வேறு நாடுகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 

இந்தியாவிலும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது, கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் குழுவின் தலைமையிலான ஆய்வில், வேப்ப மரப்பட்டையின் கூறுகள் பரவலான வைரஸ் புரதங்களை குறிவைக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது. 

Study finds neem tree-based drugs may help fight COVID

இது SARS-CoV- உள்ளிட்ட கரோனா வைரஸ்களின் வளர்ந்து வரும் மாறுபாடுகளுக்கு எதிராகவும், வைரஸ் தடுப்புகளாவும் செயல்படுகின்றன.இந்திய ஆராய்ச்சியாளர்கள் அதை விலங்கு மாதிரிகளில் சோதனை செய்து அதில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிவைரல் பண்புகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது,  கம்ப்யூட்டர் மாடலிங் மூலம், வேப்ப மரப்பட்டை சாறு பல்வேறு இடங்களில் உள்ள SARS-CoV-2 ஸ்பைக் புரதத்துடன் பிணைக்கப்பட்டு, ஹோஸ்ட் செல்களுக்கு வைரஸ் நுழைவதைத் தடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

மேலும், அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் உள்ள குழுவினர், வேப்ப மரப்பட்டை சாற்றை SARS-CoV-2 மனித நுரையீரல் செல்களில் சோதித்து பார்த்தனர் இது நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தாக பயனுள்ளதாக இருந்தது. அதோடு நோய்த்தொற்றுக்குப் பிறகு வைரஸ் பிரதிபலிப்பு மற்றும் பரவலைக் குறைத்தது. 

Study finds neem tree-based drugs may help fight COVID

இந்தக் கண்டுபிடிப்புகள் வைராலஜி இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளன அவை பின்வருமாறு,

“கொரோனா வைரஸால் யாராவது பாதிக்கப்படும்போது கடுமையான நோய் அபாயத்தைக் குறைக்கும் வேம்பு அடிப்படையிலான மருந்தை உருவாக்குவதே இந்த ஆராய்ச்சியின் குறிக்கோள்” என்று பல்கலைக்கழகத்தின் நரம்பியல் மற்றும் கண் மருத்துவத் துறையின் ஆராய்ச்சிப் பேராசிரியரான ஆய்வு இணை ஆசிரியர் மரியா நாகல் கூறினார்.

“புதிய SARS-CoV-2 மாறுபாடு வெளிப்படும் ஒவ்வொரு முறையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து புதிய சிகிச்சைமுறைகளை உருவாக்க வேண்டியதில்லை என்று நாங்கள் நம்புகிறோம்.

தொண்டை அழற்சிக்கு பென்சிலினை எப்படி எடுத்துக்கொள்கிறோமோ, அதுபோலவே கோவிட் நோய்க்கு வேம்பு அடிப்படையிலான மருந்தை உட்கொள்வதை நாங்கள் கற்பனை செய்து கொண்டு, மருத்துவமனை மற்றும் மரணம் குறித்த அச்சமின்றி நமது இயல்பு வாழ்க்கையைத் தொடர அனுமதிக்கிறது,” என்று நாகல் கூறினார்.

Study finds neem tree-based drugs may help fight COVID

தற்போதைய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய வைரஸ் தடுப்பு சிகிச்சை முயற்சிகளுக்கு இந்த ஆராய்ச்சி வழிகாட்டும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர், அதே நேரத்தில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வாக்குறுதியையும் ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

மேலும் படிக்க...பாக்யராஜ் சொல்லி தந்த முருங்கைக்காய் ரெசிபி..! அந்த விஷயத்தில்...வேற லெவல் அற்புதம்...மிஸ் பண்ணிடாதீங்க!

மேலும் படிக்க.....Valimai collection: விஜய்யின் பிகில் பட வசூலை பின்னுக்கு தள்ளிய வலிமை! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா..?


 

Follow Us:
Download App:
  • android
  • ios