டீச்சருக்கு நேர்ந்த சோகம்..! கண்ணீர் விளிம்பில் மாணவிகள்...! பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பார்த்து மாணவர்கள் "போகாதீர்கள்" என சப்தமிட்டு அழுத காட்சி அனைவரையும் நெகிழ செய்து உள்ளது.

கேரளா மாவட்டம் இடுக்கி பகுதியில் உள்ளது துவக்கப்பள்ளி. இந்த பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார் அமிர்தா என்பவர். இவர் மீது சமீபத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதன்படி குழந்தைகளை துன்புறுத்தி வருவதாகவும் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் கல்வித்துறைக்கு இவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் அவரை அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது. இதற்கான உத்தரவு ஆணையை வாங்கியவுடன் மிகவும் அழுதபடி அமிர்தா பள்ளியை விட்டு வெளியேறினார். இதனை பார்த்த மாணவிகள் என்ன செய்வது என்று தெரியாமல் பதறி கண்கலங்கி, "போகாதீங்க டீச்சர்" என அழுதபடி குரல் கொடுத்து மீண்டும் பள்ளியில் வேலையை தொடர கோரிக்கை வைத்தனர்.

ஆனால் பள்ளி கல்வித்துறை உத்தரவு என்பதால், ஆசிரியர் தொடர்ந்து அழுதவாறு குழந்தைகளை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறினார். இந்த ஒரு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து சக மாணவர்களிடம் கேட்டபோது அமிர்தா டீச்சர் மிகவும் நல்ல டீச்சர், அவர் எங்களிடம் எப்போதும் நன்றாக நடந்துகொள்வார். செல்லமாக பேசுவார். அன்பாக இருப்பார். நல்ல கருத்தை முன்வைத்து உள்ளனர்.

ஆனால் அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம்? எதற்காக இந்த குற்றச்சாட்டு? எதற்காக பணியிடை நீக்கம்? உள்ளிட்ட எந்த ஒரு விஷயமும் விவரமாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.