தமிழகதமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், ’’வங்கக்கடலில் உருவாகியுள்ள புல்புல் புயல் தமிழகத்திற்கு வர வாய்ப்பில்லை.  தமிழகம், மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை.  அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு புயலாக மாறி வடமேற்கு பகுதிக்குச் செல்லும்.  வடமேற்கில் உள்ள வடக்கு ஒடிஷா, மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கு செல்லும். 

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து, தாழ்வு மண்டலமாக மாறும். தமிழகத்தில் அதிகபட்சமாக மண்டபத்தில் 4 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இன்று முதல் 7ம் தேதி வரை மீனவர்கள் வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம்’’ என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.