கிடைத்தது ஸ்டாலின் "திருமண அழைப்பிதழ்" ..! செல்வன் ஸ்டாலினுக்கும் செல்வி துர்காவதிக்கும்...!

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் 44 ஆவது திருமண நாள் இன்று (அதாவது ஆகஸ்ட் 20 ஆம் தேதியான இன்று ) முன்னிட்டு தொண்டர்கள் உறவினர்கள் என அனைவரும் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் அவர்களுக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக துர்கா ஸ்டாலின் அவர்களது திருமண நாளை முன்னிட்டு சிறப்பு பேட்டி ஒன்றையும் அளித்து இருந்தார். அந்த பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து இருந்தார். குறிப்பாக ஸ்டாலின் அவர்கள் மேற்கொள்ளும் யோகா, உடற்பயிற்சி குறித்தும் உணவு முறைகள் குறித்தும் உதயா சிறுவயதாக இருக்கும் போது எப்படி பயப்படுவார்? அவருடைய படிப்பு.. காதல் விவகாரம் என அனைத்தையும் பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் இவர்களின் திருமண அழைப்பிதழ் கிடைத்து உள்ளது. 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி ஸ்டாலினுக்கும் துர்காவைதி அவர்களுக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. அந்த திருமண அழைப்பிதழில் உள்ள விவரம் பின்வருமாறு...

"சென்னை அண்ணா சாலையில் உள்ள பொம்மிடி பத்மாவதி திருமண மண்டபத்தில் கழக பொதுச்செயலாளர் கல்வி அமைச்சர் நாவலர் தலைமையில், கழக பொருளாளர் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேராசிரியர் முன்னிலையில் செல்வன் முக ஸ்டாலினுக்கும் செல்வி துர்காவாதிக்கும் திருமணம் நடைபெறும் என்றும், இந்திய குடியரசு தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களும் மற்றும் அறிஞர் பெருமக்களும் வாழ்த்துரை வழங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பத்திரிக்கை தற்போது வைரலாக சமூக வலைதளங்களில் திமுக தொண்டர்களால் பெரிதளவில் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது