Pans-cleaning tips: சமைக்கும் போது பாத்திரம் கருகாமல் இருக்க..? பின்பற்ற வேண்டிய சிம்பிள் டிப்ஸ்..!

Pans-cleaning tips: சமைக்கும் போது பாத்திரம் கருகாமல் இருக்க, உங்களுக்கு உதவும் இரண்டு எளிய சமையலறை, குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Stainless steel pan cleaning hacks

நீங்கள் சமைக்கு போது, பாத்திரம் அடிக்கடி கருகி உணவை கெடுத்து விடும். இது வழக்கமாக சமைக்கும், பெரும்பாலான வீடுகளில் நிகழ்கிறது. ஆனால், பாத்திரத்தை எத்தனை முறை சுத்தம் செய்தாலும், எரிந்த மேற்பரப்பு, வாசனை இருக்கும். இவற்றை சுத்தம் செய்வது உங்களுக்கு கடினமாக இருக்கும். 

உங்களுக்கு உதவும் இரண்டு எளிய சமையலறை, குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Stainless steel pan cleaning hacks

தேவையான பொருட்கள்:

 பேக்கிங் சோடா

வினிகர்

துணிகளை கழுவும் சோப்பு

செய்முறை விளக்கம்:

Stainless steel pan cleaning hacks

பேக்கிங் சோடா மற்றும் வினிகர் ஆகியவை கடாயில் இருந்து அனைத்து கார்பன் படிவுகளையும் அகற்றும் தன்மை கொண்டது. .

அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயில் 2 டீஸ்பூன் வாஷிங் டிடர்ஜென்ட் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். சுத்தமான தண்ணீர் மற்றும் பாத்திரம் கழுவும் சோப்புடன் அதை நன்கு கழுவவும்.

இது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், அலுமினியம் மற்றும் இரும்பு பாத்திரங்களில் உள்ள கறைகளை போக்கும் தன்மை கொண்டது.

அதேபோன்று, எரிந்த கடாயில், சிறிது பேக்கிங் சோடாவை தூவி, அதனை 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

அதன் பிறகு, வெள்ளை வினிகரில் ஒரு சில துளிகள் எடுத்து தெளித்து, அதை 30 முதல் 40 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்கவும். இப்போது உலோக ஸ்க்ரப் பயன்படுத்தி பாத்திரத்தை சுத்தமான தண்ணீரில் நன்றாக தேய்த்து கழுவவும். 

Stainless steel pan cleaning hacks

கருகிய பாத்திரத்தை எப்படி சுத்தம் செய்கிறது ?

பேக்கிங் சோடா அல்லது சோடியம் பைகார்பனேட் ஒரு மென்மையான சிராய்ப்புப் பொருளாகும். இது கரையை போக்கவும், சுத்தம் செய்யவும் உதவுகிறது. 

இயற்கையில் அமிலத்தன்மை கொண்ட வினிகர், ப்ளீச் உள்ளிட்ட பிரபலமான கிளீனர்களுக்கு பதிலான ஒரு பயனுள்ள, நச்சுத்தன்மையற்ற மாற்றாகும். இது வாசனை நீக்குகிறது, கறை மற்றும் துருவை அகற்ற உதவுகிறது.

மேலும் படிக்க...Hormones: ஹெபியோ ஹெப்பி..! உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் 4 ஹார்மோன்கள்! எப்போது சுரக்கும் தெரியுமா?

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios