சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பெண் ஊழியர்கள் தினமும் காலை பணிக்கு வந்ததும் நிறுவன முதலாளிக்கு முத்தம் கொடுத்துவிட்டு தான், வேலையை பார்க்க வேண்டுமாம்.

இதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள் என்றால், காலை அலுவலகம் வந்ததும் நிறுவன முதலாளிக்கு முத்தம் கொடுத்தவிட்டு, ரிப்போர்ட் செய்துவிட்டு வேலையை தொடங்கினால் ,ஊழியர்களுடனான உறவு வலுப்பெறும் என்றும், பெண் ஊழியர்களுக்கு பணி புரிய ஊக்கமளிக்கும் என்றும் சொல்றாங்களாம் .
நிறுவனத்தில் பணிபுரியும் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் மது தயாரிக்க பயன்படும், மெஷின்களை பீஜிங்கில் விற்பனை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில், தினமும் அலுவலகத்தில் இவ்வாறு முத்தம் கொடுக்க சொல்வது பிடிக்கவில்லை என்று பெண்கள் பலரும் கூறுகின்றனராம்.

இது போன்று முத்தம் கொடுப்பது பிடிக்கவில்லை என்று கூறிய இரண்டு பெண்களை கட்டாயப்படுத்தி வேலையில் இருந்து நிறுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.