இந்தியருக்கு லாட்டரியில் ரூ.29 கோடி பரிசு..! போனில் தொடர்பு கொள்ள முடியாததால் லோலோன்னு தேடி வரும் நிறுவனம்..!   

அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரி நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த நிலையில் இதன் மூலம் ரூபாய் 29 கோடி பரிசு பெற்ற இந்தியரை இந்த நிறுவனம் தேடி வருகிறது.

இதற்கு முன்னதாக இந்த நிறுவனத்தில் லாட்டரி டிக்கெட் வாங்கிய பல இந்தியர்கள் பல கோடிகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் கடந்த மாதம் மங்களூரை சேர்ந்த முகமது பயஸ் என்பவருக்கு 23 கோடி லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று நடந்த குலுக்களிலும் இந்தியாவை சேர்ந்த ஒரு நபருக்கு பரிசு கிடைத்துள்ளது. ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயர் என்ற நபருக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 29 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயர் என பெயர் கொண்டதால் கேரளாவை சேர்ந்தவர் என கணிக்கப்பட்டு அவரை தொடர்ந்து தேடி வருகிறது இந்த நிறுவனம். லாட்டரி சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தொடர்பு எண்ணுக்கு போன் செய்து கேட்டால் வேறு ஒரு நபருக்கு போன்கால் செல்வதாகவும் மற்றும் வேறு நம்பருக்கு போன் செய்தால் அந்த நபர் அங்கு இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர். இதனால் ஸ்ரீனு ஸ்ரீதரன் எங்கு உள்ளார் என தீவிரமாக தேடி வருகிறது இந்த நிறுவனம்.