சீனாவில் இருந்து இலங்கை வருபர்களுக்கு விசா ரத்து..! கரோனோ வைரஸால் ஒருவர் பாதிப்பு...! 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் எதிரொலி காரணமாக பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 

இலங்கையில் கொரோனோ வைரசால் ஒருவர் பாதிக்கப்பட்டதை அடுத்து, சீனப் பயணிகள் யாரேனும் இலங்கை வந்தால் அவர்களுக்கு விசா கொடுப்பதை நிறுத்த அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அதாவது உலகத்தில் ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் நேரடியாக என்று அந்நாட்டு விமான நிலையம் வந்தடைந்த உடன் அங்கேயே விசா பெற்று செல்வது வழக்கம். அந்த வகையில் உலக நாடுகளிலிருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள் இதுபோன்ற பயணத்தில் ஈடுபடுவது வழக்கம். இப்படியிருக்கையில் தற்போது கரோனா வைரஸ் சீனா முழுக்க பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இதன் காரணமாக உலக நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதியன்று சீனாவில் இருந்து 40 வயது மதிக்கத்தக்க ஒரு சீனப்பெண் இலங்கை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அவர் அங்கு விசா பெற்று மீண்டும் சீனாவிற்கு செல்ல கடந்த 25 ஆம் தேதி கிளம்பினார். அப்போது  இலங்கை விமான நிலையத்தில் அவருக்கு சோதனை செய்யப்பட்டது. 

சோதனையில் அவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதால், இலங்கையிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக  இலங்கை அரசு தெரிவித்து உள்ளது மேலும் சீனாவில் இருந்து இலங்கை விமான நிலையம் வருபவர்களுக்கு விசா வழங்க ரத்து செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது இலங்கை அரசு.