Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் கொரோனாவுக்கு ஸ்புட்னிக் வி... அரசு மருத்துவமனைகளில் இனி இலவசம்..!

 ரஷ்ய தடுப்பூசி ஸ்பூட்னிக் செலுத்திக்கொள்ள தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Sputnik V for Corona in India ... now free in government hospitals
Author
India, First Published Jul 6, 2021, 12:21 PM IST

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் தற்போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு உள்நாட்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன.  இதற்கிடையில், ரஷ்ய தடுப்பூசி ஸ்பூட்னிக் செலுத்திக்கொள்ள தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், விரைவில் மக்களுக்கு அரசு மருத்துவமனைகளிலும் ஸ்பூட்னிக் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Sputnik V for Corona in India ... now free in government hospitals

’’ஸ்பூட்னிக் வி இந்தியாவில் இலாவசமாக செலுத்தப்படும் மூன்றாவது கொரோனா தடுப்பூசியாக மாறக்கூடும். அரசாங்க தடுப்பூசி மையத்தில் மக்களுக்கு இலவசமாக ஸ்பூட்னிக் தடுப்பூசி வழங்க விரைவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் கொரோனா செயற்குழுவின் தலைவர் என்.கே. அரோரா தெரிவித்தார்.

தற்போது, ​​இந்தியாவுக்கு கிடைக்கும் ஸ்பூட்னிக் தடுப்பூசிகளின் அளவு குறைவாக உள்ளது. மேலும், இது தனியார் மையங்களில் மட்டுமே கிடைக்கிறது. இதற்கான கட்டணத்தை செலுத்திய பிறகே இந்த தடுப்பூசி செலுத்தப்படுகின்றது. ஸ்புட்னிக் தடுப்பூசியின் விநியோகத்தை அதிகரிக்க அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும், விரைவில் ஸ்பூட்னிக் இலவச தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் டாக்டர் அரோரா  கூறினார்.Sputnik V for Corona in India ... now free in government hospitals

தடுப்பு மருந்து செலுத்தும் விதம் போலியோ தடுப்பு மருந்து போல் இருக்கும். ரஷ்ய தடுப்பூசி ஸ்பூட்னிக்கை சேமிப்பதில் சிக்கல் உள்ளது. ஏனெனில் அதை வைத்திருக்க மைனஸ் 18 டிகிரி வெப்பநிலை தேவைப்படுகிறது. போலியோ தடுப்பூசிக்காக குளிர் சங்கிலி ஏற்பாடு செய்யப்பட்டது போல, ஸ்பூட்னிக் சேமிப்பும் அதே வழிகளில் செய்யப்படும் என்று டாக்டர் அரோரா, கூறினார். அதே நேரத்தில், கிராமப்புறங்களிலும் இந்த தடுப்பூசிக்கான அணுகல் உறுதி செய்யப்படும் என்றார்.Sputnik V for Corona in India ... now free in government hospitals

தடுப்பூசி செலுத்தும் வேகத்தில் ஏற்பட்டுள்ள தடை குறித்து கூறுகையில், டாக்டர் அரோரா, வரும் நாட்களில் மீண்டும் இந்த பணி விரைவுபடுத்தப்படும் என்றார். இதுவரை 34 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன என்றும், ஜூலை மாதத்திற்குள் 12 முதல் 16 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்றும் என்றும் அவர் கூறினார். தினமும் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களை போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios