காவிய கட்டினாலே ஹீரோதான்டா.... காலா ரஜினி முதல் .. இப்ப பிகில் விஜய் வரை ..! 

விஜய் நடித்து வெளியான மெர்சல் படமாக இருந்தாலும் சரி, ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த காலா படமாக  இருந்தாலும் சரி இரண்டு படத்திலும் ஹீரோ அணிந்திருக்கும் வேட்டி கலர் நோட் பண்ணி பார்த்தால் காவி உடை என்பது பளிச்சென தெரிகிறது.

சரி அதுக்கு என்ன இப்ப என்பது தானே கேள்வி.. அதாவது மெர்சல் படம் வெளியான பிறகு அதில் இடம் பெற்ற  காட்சிகள் ஆளும் அதிமுக அரசை குறை சொல்வதாக உள்ளது என பல எதிர்ப்புகள்  கிளம்பியது. அப்போது, விஜய் யின் அப்பா  இதுதான் சாக்கு என கிளம்பி அவர் இஷ்டத்துக்கு விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என   கொக்கரித்துக்கொண்டிருந்தார். 

அப்போது, ஒரு நிகழ்சகியில் பங்கேற்ற S A சந்திரசேகரும் ஒரு கருத்தை சொல்லி இருந்தார். அதில் "இன்னும் இப்படியே சென்றால்.... பூரா பயலுங்களும் காவி வேட்டி கட்டிட்டு சுத்தபோரானுங்க" என... ஆனால்  இன்னைக்கு, அவருடைய மகனும் சிறந்த நடிகருமான விஜய் தான் நடித்து வெளிவர உள்ள பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே காவி வேட்டி அணிந்து வருகிறார். மற்றவர்களை எல்லாம் கேலி  கிண்டலாக பேசி வந்த S A சந்திரசேகர் கடைசியில் தன் மகனையே காவி உடையில் பார்த்து இருப்பது அவருக்கே அதிர்ச்சியாக இருக்குமோ அல்லது இன்ப அதிர்ச்சியாக  இருக்குமோ என விமர்சனம் எழுந்துள்ளது. 

இது குறித்த சில பதிவுகளை கூட முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. காவி அணிந்தவர்கள் தான் ஆள்கிறார்கள் என ஒரு பக்கம் எதிர்க்கட்சிகள் புலம்பி  தள்ளினாலும் சினிமாவில் கூட காவி அணிந்தால் வெற்றியாளர்கள் என்ற அளவிற்கு ஒரு இமேஜ் உருவாகி உள்ளது. காவி தான் நாட்டையும் ஆள்கிறது. காவி அணிந்து தான் சினிமாவில் கூட ஹீரோவாக வருகிறார்கள். இதிலிருந்து காவி அணிந்தாலே ஹீரோதான் என்ற போக்கில் செல்கிறது தற்போதைய விமர்சனங்கள். 

சினிமாவில் பல இடங்களில் ஆளும் கட்சியை தாக்கி பேசி படம் எடுத்தாலும், கடைசில்  நடிகர் விஜய்யும் காவி உடைக்கு  மாறீட்டாரே என கருத்துக்கள் எழ தொடங்கி உள்ளது