பொருளாதார பிரச்சனை, மற்றும் சூழ்நிலை காரணமாக தொடர்ந்து ப்ரீமியம் கட்டி முடியாமல், காலாவதியான எல்.ஐ.சி பாலிசியை மீண்டும் புதுப்பிக்க சிறப்பு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுகுறித்து எல்.ஐ.சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, கடினமான இந்த சூழலை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களால் கட்ட முடியாமல், காலாவதியான பாலிசிகளை மீண்டும் புதிப்பித்து வாடிக்கையாளர்கள் பயன் பெரும் வகையில் சிறப்பு திட்டத்தை எல்.ஐ.சி நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

9 ஆம் தேதி கொண்டுவந்த இந்த திட்டம், ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் சூழ்நிலை காரணமாக பிரிமியம் செலுத்த முடியாமல் , காலாவதியான பாலிசிகளை வாடிக்கையாளர்கள் தற்போது புது பிடித்து பயனடியுமாறும் கூறப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு திட்டத்தின் மூலம் பலர் பயன் பெறுவார்கள் என கூறப்படுகிறது.