இன்றைய ஸ்பெஷல் ராசி பலன் இதோ..!  

மேஷம் ராசி நேயர்களே..

இன்றைய தினத்தில் உங்களது வீட்டைத்தேடி உறவினர்கள் வருவார்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்களை தீட்டலாம் என முடிவெடுப்பீர்கள்.

ரிஷப  ராசி நேயர்களே....

நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாள் இன்று. மேலும் சகோதர வழி ஒத்துழைப்பால் பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். தன்னம்பிக்கையோடு செயல்படும்  நாள் இது.

மிதுன ராசி நேயர்களே...

உங்களுக்கு பொதுவாகவே இன்றைய தினத்தில் ஆன்மீகத்தில் ஆர்வம்  அதிகமாக காணப்படும். எதிர்பாராத பணவரவு இருக்கும். எதிர்பாராத நண்பர்கள் உங்களை தேடி வருவார்கள். நல்ல விஷயங்கள் நடக்கும். 

கடக ராசி நேயர்களே...

உங்களுக்கு இது மிகவும் யோகமான நாள். விஐபிக்களின் தொடர்பு கண்டிப்பாக கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் பயணங்களின் மூலம் நல்ல செய்தி கேட்பீர்கள்.

சிம்மராசி நேயர்களே....

உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும் நாள். மறதி அதிகரிக்கும். குடும்பத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்.

கன்னி ராசி நேயர்களே....

இன்றைய தினத்தில் தொழில் தொடங்கும் வாய்ப்பு உங்களுக்கு உருவாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் திசைமாறும். மாற்று மருந்துகள் மூலமாக உங்களுடைய உடல் நலம் சீராகும்.

துலாம் ராசி நேயர்களே...

இன்று காலை பொழுதை விட மாலை பொழுது உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக அமையும். தொழில் சம்பந்தமாக புதிய பேச்சு அடிபடும்.

விருச்சிக ராசி நேயர்களே... உங்களுக்கு இன்றைய தினம் காலை பொழுதில் நல்ல மகிழ்ச்சிகரமாக இருக்கும். மற்றவர்களை நம்பி தாங்கள் கொடுத்த வேலையை மீண்டும் உங்களையே வந்தடையும்.

தனுசு ராசி நேயர்களே...

இது உங்களுக்கு இனிமையான நாள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வாழ்க்கை துணை மூலம் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் நேரம். நீங்கள் எதிர்பார்த்த பணமும் இன்று உங்களை வந்து சேரும்.

மகர ராசி நேயர்களே...

நீண்ட நாட்களாக தேடி வந்த வேலை குறித்து முக்கிய செய்தி உங்களை வந்தடையும். நீங்கள் பேசும்போது நிதானம் தேவை. தொழில் வளர்ச்சியைப் பொறுத்தவரை சற்று யோசனை செய்வது நல்லது.

கும்ப ராசி நேயர்களே...

நீண்ட நாட்களாக கல்யாணம் பத்தி யோசித்திருப்பீர்கள். அதற்கான  கைக்கூடும் நாள். இன்று நல்ல அனுகூலம் அடையக்கூடிய நாள்.

மீன ராசி நேயர்களே...

இன்று பணம் உங்கள் தேடி வரும் உற்சாகமாக இருப்பீர்கள். உறவினர் வழியாக உங்களுக்கு நல்லது வந்து சேரும் சொத்து பிரச்சனை நீங்கும்.