Asianet News TamilAsianet News Tamil

குடியரசு  தினத்தை  சிறப்பிக்கும் சிறப்பு கூகிள் டூடுல்......

special google-toodle
Author
First Published Jan 26, 2017, 12:49 PM IST


குடியரசு  தினத்தை  சிறப்பிக்கும் சிறப்பு கூகிள் டூடுல்......

இந்தியாவின் 68 ஆவது குடியரசு தினவிழா நாடெங்கும்  வெகு விமரிசையாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில்,  இந்திய  குடியரசு  தினத்தை  சிறப்பிக்கும் வகையில் கூகிள் ,  சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.  

குடியரசு  தினம் :

இந்தியா  சுதந்திரம்  அடைந்த பிறகு, 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாகத்திற்கு வந்தது என்பது குறிபிடத்தக்கது.  இந்நாள் தான் ,  குடியரசு  தினமாக  கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில்,  இந்திய குடியரசு தினத்தையொட்டி ,  கூகிள் சிறப்பு  டூடுல் வெளியிட்டுள்ளது.

சிறப்பு  கூகிள் டூடுல்:

நேற்றிரவில் வெளியிடப்பட்ட இந்த டூடுல், ஒரு விளையாட்டு அரங்கத்தில், இந்திய தேசியக் கொடியின் மூவர்ணத்தை குறிக்கும் வகையில் மக்கள் கூடியிருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios