சென்னை கடல் அலையில் திடீர் நுரை...! ஆச்சர்யத்தை காண ஓடோடி வரும் மக்கள்..! 

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை கடல் அலை மீது திடீரென பெரும் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நேற்று திடீரென பட்டினப்பாக்கம் கடற்கரை கடல் அலையில் நுரை கிளம்பி உள்ளது. இதனை பார்ப்பதற்கு ஓர் பனிக்குவியல் போன்று காணப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் ஆர்வமாக சென்று இந்தகாட்சியை பார்க்க சென்று உள்ளனர் 

இருந்தபோதிலும் எதற்காக இப்படி திடீரென ஒரு மாற்றம்? என பல்வேறு கேள்விகள் எழுந்தது. மேலும் கடலில் அதிக கழிவுகள் சேர்வதற்கு பிரச்சினைதான் இது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விரைந்து வந்து, கடற்கரையில் உள்ள நுரையை எடுத்து சென்று சோதனை செய்து வருகின்றனர். 

இதனுடைய முடிவுகள் வருவதற்கு ஒரு வார காலம் ஆகும் என்பதால் அதன் பின்னரே எதற்காக இந்த திடீர் நுரை கிளம்பியது ...இதற்கு என்ன காரணம் என்ற முழுவிவரம் தெரியவரும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.