இணையதள வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான ஸ்நாப்டீல் தீபாவளி விற்பனைக்கான அடுத்த தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன்படி, வீட்டுஉபயோகப்பொருட்கள் முதல் குழந்தைகள், இளைஞர்கள் பயன்படுத்தும் பொருட்கள், மின்னனு சாதனங்கள் என அனைத்துக்கும் 70 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2ந்தேதி முதல் 6ந்தேதி வரை 5-நாள்கள் அதிரடி விலைகுறைப்பு விற்பனையை அறிமுகம் செய்த ஸ்நாப்டீல், இந்த விற்பனை மூலம் ரூ. ஒரு கோடி வரை நாடுமுழுவதும் ஆர்டர்களைப் பெற்றது.
இப்போது, மீண்டும் தீபாவளிக்கான தனது 2-ம் கட்ட தள்ளுபடி விற்பனையை இன்று முதல் 14-ந்தேதி வரை 3 நாட்களுக்கு தொடங்கி உள்ளது.
இதன்டி, வீட்டு உபயோகப்பொருட்கள், மின்னனு சாதனங்கள், மொபைல்போன்கள், அலங்காரப்பொருட்கள், பர்னிச்சர்கள், நுகர்வோர் சாதனங்கள், அழகு சாதனங்கள், இளைஞர்கள், குழந்தைகளுக்கான ஆடைகள் என அனைத்து வகைகளுக்கும் 70 சதவீதம் வரை தள்ளுபடியை ஸ்நாப்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக இந்த தள்ளுபடி காலத்தில் ஸ்ேடட் பேங்க் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்குவோர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பஜாஜ் பின்சர்வ் மூலம் பொருட்களை தவணைமுறையில் வாங்கும் போது, முன்பணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
