Asianet News TamilAsianet News Tamil

அட இந்த ரகசியம் தெரியாம போச்சே...!

small food tips now you can try to add taste
small food tips now you can try to add taste
Author
First Published Mar 12, 2018, 6:22 PM IST

சின்ன சின்ன டிப்ஸ் நாம மேற்கொண்டாலே போதும்,நாம் சமைக்கும் உணவு அம்புட்டு ருசியாக இருக்கும்னு பல சூப்பர் டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது....நீங்களும் ட்ரை பண்ணுங்க...

1)கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

small food tips now you can try to add taste

2)வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

small food tips now you can try to add taste

3)பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

small food tips now you can try to add taste

4)பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி - தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

small food tips now you can try to add taste

5)கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.

small food tips now you can try to add taste

Follow Us:
Download App:
  • android
  • ios