பகல் முழுவதும் வேலைசெய்யும் மனிதன் மட்டுமில்லாமல், விலங்குகள், மரங்கள் கூட உறங்கி, தங்களது அன்றாட பணிகளில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்கின்றன. ஏனெனில், ஒவ்வொரு உயிருக்கும் உறக்கம் அவ்வளவு முக்கியம். சரியான உறக்கம் இல்லாவிட்டால், உடல் மட்டுமல்ல, மூளையும் சிறப்பாக செயல்படாது. 

அதனால், நாம் செய்யும் வேலைகளில் தவறுகள் ஏற்படும். தொழிற்சாலைகளில் தூக்கமில்லாமல் வேலைசெய்த நபர்கள், விபத்தில் சிக்கி, கை-கால்களை இழந்துள்ளனர். பலர் உயிரை இழந்துள்ளனர். அதேநேரத்தில், உடலுக்குத் தேவையான ஓய்வை அளித்து வேலை செய்வோர், தங்களது வேலைகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்கின்றனர். இதன் காரணமாகவே மேலைநாடுகளில் பல நிறுவனங்களில் ரெஸ்ட் ரூம் என்ற ஒரு அறை உள்ளது. 

 

நம் நாட்டில் இருப்பதுபோல், அது கழிவறை அல்ல. தொழிலாளர்கள் வேலைக்கு இடையே கோழித்தூக்கம் போடுவதற்கான அறை அது. தூக்கம் நமக்கு மிகவும் முக்கியமானது என்பதால் ஒவ்வொருவரும், தங்களது வயதுக்கு ஏற்றவாறு, தூக்க நேரத்தை பின்பற்ற வேண்டும். மது, புகையிலை, காபி, சிகரெட் போன்றவற்றை பயன்படுத்துவோரும், மன அழுத்தம், தலைவலி போன்றவற்றுக்கு, மருத்துவர்களின் உரிய பரிந்துரை இல்லாமல் மருந்துகளை பயன்படுத்துவோருக்கும் தூக்கம் குறைவாகவே இருக்கும். ஆனாலும், எப்படியாவது குறிப்பிட்ட நேரமாவது தூங்கி, உடலுக்கும், மூளைக்கும் ஓய்வளிக்க வேண்டியது அவசியம்.

எவ்வளவு நேரம் தூங்கலாம்?

பிறந்த குழந்தை – 16 முதல் 20 மணி நேரம்
வளரும் குழந்தை – 10 முதல் 12 மணி நேரம்
ஆண்கள் – 6 மணி நேரம்
பெண்கள் – 7 மணி நேரம்

தூங்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

அசதி

கவனக்குறைவு

ஞாபகமறதி

மன உளைச்சல்

ஹார்மோன் பாதிப்புகள்

புரத உற்பத்தி குறைதல்

முகப்பொலிவு மங்குதல்

இளநரை ஏற்படுதல்

உடலில் சுருக்கம் ஏற்படுதல்

ரத்த அழுத்தம்

இதய நோய்

சர்க்கரை நோய்

நோய் எதிர்ப்புத்திறன் குறைதல்

பசியின்மை

கண் எரிச்சல்

கல்லீரல் மற்றும் குடல்நோய்கள்

சரியான நேரம் தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்

உடல் பொலிவு பெறும்

உடல் சுறுசுறுப்பாக இருக்கும்

மனம் அமைதியாக இருக்கும்

வேலைகள் சிறப்பாக நடக்கும்

உற்பத்தி பெருகும்.