தூங்கும் போது ,பேய் வந்து அமுக்குற மாதிரி இருக்கா ? நினைவிருக்கும் ஆனால் கை கால் அசைக்க முடியாது......
நம் வாழ்கையில் நடக்கும் எதார்த்தமான விஷியங்களில் இதுவும் ஒன்று....
பொதுவாகவே நாம் தூங்கும் போது , கனவு வரும் அதில் நல்லதும் வரும், கெட்ட நிகழ்வு நடப்பது போல கூட வரும், ஏன் கனவில் டூயட் கூட வரும், கூடவே பேயும் வந்து அமுக்கும் இல்லையா ....?
பேய் அமுக்குதுன்னு நிறைய பேர் சொல்றோமே.... அது எந்த அளவுக்கு உண்மை ...?
நல்லா கவனிங்க .....
மனித உறக்கம் :
மனித உறக்கத்தில் இரண்டு நிலை உண்டு.
· ஒன்று விரைவான கண் அயர் இயக்கம் (RAPID EYE MOVEMENT)
· மற்றொன்று அதற்கு எதிர்பதம் (NonREM)
நாம் உறங்கும் போது முதலில் நிகழ்வது NREM.
அடுத்து REM நிகழும்.!
இப்படி இரண்டுமே மாறிமாறி நிகழும் தன்மை கொண்டதே மனித உறக்கம்.
ஒரு REM அல்லது NREMன் சுழற்சி 90 நிமிடங்கள் வரை இருக்கலாம்.
NREM :
NREMன் கடைசி கட்டத்திலேயே உங்கள் உடல் முழுமையா உறக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து 100% தளர்ந்திருக்கும்.
அப்போது சுயநினைவும் முழுவதும் மங்கியிருக்கும். NREM நிலை முடிந்து REM நிலை தொடங்கும்போது உங்கள் கண்கள் கொஞ்சம் இயங்கும். கனவுகளும் தோன்றும், ஆனால் உங்கள் உடல் இன்னும் தளர்ச்சி நிலையிலேயே இருக்கும்.
REM :
REM சுழற்சியில் இருக்கும் உங்கள் உடல் உறக்கத்தில் இருக்கும்போது...
அந்த சுழற்சி முடிவதற்குள் சிலநேரம் உங்களுக்கு சுயநினைவு தோன்றினால்...
உங்கள் உடல் 100% REM சுழற்சியில் இருப்பதால் அசைக்க முடியாது.
மூளை விழித்திருக்கும். ஆனால் மூளையின் கட்டளைகளை உடல் உறுப்புகள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்காது .
பேய் வரும் நேரம் இதுதான் !
அப்போதுதான் நமக்கு தோணும், "அய்யய்யோ நான் கைகாலை அசைக்க ட்ரைப் பண்றேன் ஆனா என்னால முடியலயே பேய் வந்து அமுக்குது போல" என்று.!
அதுமட்டும் இல்லாம, நம் கண்களும் கொஞ்சமா விழித்திருக்கும் , நம்மை சுற்றி யாராவது படுத்திருந்தால் கூட பார்க்க முடியும் . யாரவது நம்மை அருகில் வந்து தூக்கி விடமாட்டார்களா என மனம் சிந்திக்கும்...... ஆனால் ஒன்றும் செய்ய இயலாது.
இந்த நேரத்தில் தான் , நமக்கு பேய் நினைப்பே வரும்......இப்போ தெரிகிறதா நாம் சொல்லும் “ பேய் அமுக்குது” என்பதற்கு அர்த்தம் .இதற்கு ஆங்கிலத்தில் “ sleep paralysis “ என்று சொல்வார்கள்.......
போங்க .....நிம்மதியா தூங்குங்க.......
